![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/James_Wan_by_Gage_Skidmore_2.jpg/640px-James_Wan_by_Gage_Skidmore_2.jpg&w=640&q=50)
ஜேம்ஸ் வான்
From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் வான் (ஆங்கில மொழி: James Wan) (பிறப்பு: 27 பெப்ரவரி 1977)[2] என்பவர் ஆத்திரேலிய நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக திகில் வகையான சா, இன்சீடியஸ், தி கான்ஜுரிங், இன்சீடியஸ்: சாப்டர் 2 மற்றும் அன்னாபெல் போன்ற திரைப் படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படுகிறார்.
ஜேம்ஸ் வான் | |
---|---|
![]() | |
பிறப்பு | 27 பெப்ரவரி 1977 (1977-02-27) (அகவை 47) கூச்சிங், சரவாக், மலேசியா |
தேசியம் | ஆத்திரேலியர் [1] |
பணி | இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
இவர் தயாரித்த திகில் படங்கள் குறைந்த பட்சம் $2 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்த இரண்டாவது திகில் உரிமையாகும்.[3] அத்துடன் இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான அணு மான்ஸ்டர் புரொடக்சன்சு நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு சா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தத் திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்து உலகளவில் $1 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்துள்ளன.[4][5] Following a period of setbacks,[6] அதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் பியூரியஸ் 7 என்ற படத்தை இயக்கினார், பின்னர் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் படமான அக்வாமேன்[7] (2018) மற்றும் அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (2023) ஆகிய மீநாயகன் வகை திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி 17வது அதிக வசூல் செய்த இயக்குனராக உள்ளார், இவரது படங்கள் உலகம் முழுவதும் $3.7 பில்லியன் வசூலித்துள்ளன.[8][9]