அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம்
From Wikipedia, the free encyclopedia
அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (ஆங்கில மொழி: Aquaman and the Lost Kingdom) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிசி பிலிம்ஸ் உடன் இணைந்து சப்ரான் கம்பெனி மற்றும் அட்டாமிக் மான்ஸ்டர் புரொடக்சன்சு ஆகியவை தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் 15வது படம் ஆகும்.
அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் | |
---|---|
இயக்கம் | ஜேம்ஸ் வான் |
தயாரிப்பு | |
மூலக்கதை | டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்கள் |
திரைக்கதை | டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு |
இசை | ரூபர்ட் கிரெக்ஸன்-வில்லியம்ஸ்[1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டான் பர்கெசு |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 22, 2022 (2022-12-22) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $205 மில்லியன்[2] |
இது 2018 ஆம் ஆண்டு வெளியான அக்வாமேன் திரைப்படத்தின் இரண்டாவது படமாகவும்[3] டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பதின்மூன்றாவது திரைப்படமும் ஆகும்.[4] ஜேம்ஸ் வான்[5][6] இயக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு என்பவர் திரைக்கதை எழுத, ஜேசன் மோமோவா,[7][8] அம்பர் கேர்ட்டு,[9][10] பாட்ரிக் வில்சன்,[11] டால்ப் லண்ட்கிரென், யஹ்யா அப்துல்-மதீன் II மற்றும் டெமுரா மோரிசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் படம் திசம்பர் 19, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள க்ரோவில் நடந்த ரசிகர் நிகழ்வில் திரையிடப்பட்டது, வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் மூலம் அமெரிக்காவில் டிசம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் $13 மில்லியனை வசூலித்தது மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.