![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/JRThakur.jpg/640px-JRThakur.jpg&w=640&q=50)
ஜெய்ராம் தாகூர்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஜெய்ராம் தாகூர் (Jai Ram Thakur) (பிறப்பு 6 சனவரி 1965)[2] ஒரு இந்திய அரசியல்வாதியும், இமாச்சலப்பிரதேசத்தின் 14 ஆவது மற்றும் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவர் முதலமைச்சர் வேட்பாளரான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரேம் குமார் துமால் நவம்பர் 2017 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுஜான்பூர் தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேசத்தின் சட்டமன்றத் தலைவராக 24 டிசம்பர் 2017 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ஜெய்ராம் தாகூர் 1998 ஆம் ஆண்டிலிருந்து இமாச்சலப்பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னதாக இமாச்சலப்பிரதேச அரசில் அமைச்சராகவும் இருந்தார். 2009-2012 வரையிலான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தின் சட்டசபைக்கு மண்டியில் சிராஜ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாண்புமிகு ஜெய்ராம் தாகூர் | |
---|---|
![]() | |
6வது இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 27 டிசம்பர் 2017 – 8 டிசம்பர் 2022 | |
ஆளுநர் | கல்ராஜ் மிஸ்ரா பி. தத்தாத்திரேயா |
முன்னையவர் | வீரபத்ர சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சனவரி 1965 (1965-01-06) (அகவை 59)[1] மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
துணைவர் | மருத்துவர் சாதனா தாக்கூர் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | டண்டி கிராமம், அஞ்சலகம் & துனாக் தாலுகா மண்டி மாவட்டம், இமாச்சலப்பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | வல்லபா அரசு கல்லுாரி, மாண்டி பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் |