இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
வீரபத்ர சிங் (Virbhadra Singh, சூன் 23, 1934 - சூலை 8, 2021) முன்னாள் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர்[1] காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். இமாச்சலப் பிரதேச முதல்வராக, 1983 முதல் 1990 வரையும், 1993 முதல் 1998 வரையும் 2003 முதல் 2007 வரையும் முன்னதாகப் பொறுப்பாற்றி உள்ளார். நடுவண் அரசிலும் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1962, 1967, 1972, 1980 மற்றும் 2009களில் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
வீரபத்ர சிங் | |
---|---|
4வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 25 டிசம்பர் 2012 – 27 டிசம்பர் 2017 | |
முன்னையவர் | பிரேம் குமார் துமால் |
பின்னவர் | ஜெய்ராம் தாகூர் |
தொகுதி | சிம்லா ஊரகம் |
பதவியில் ஏப்ரல் 8, 1983 – மார்ச்சு 5, 1990 | |
முன்னையவர் | தாக்கூர் ராம்லால் |
பின்னவர் | சாந்த குமார் |
தொகுதி | ரோஹரூ |
பதவியில் திசம்பர் 3, 1993 – மார்ச்சு 24, 1998 | |
முன்னையவர் | சாந்த குமார் |
பின்னவர் | பிரேம் குமார் துமால் |
தொகுதி | ரோஹரூ |
பதவியில் மார்ச்சு 6, 2003 – திசம்பர் 30, 2007 | |
முன்னையவர் | பிரேம் குமார் துமால் |
பின்னவர் | பிரேம் குமார் துமால் |
தொகுதி | ரோஹரூ |
நாடாளுமன்ற உறுப்பினர் மண்டி மக்களவைத் தொகுதி | |
பதவியில் 2009–2012 | |
குறு,சிறு மற்றும் இடைநிலை தொழில்துறை அமைச்சர் | |
பதவியில் சனவரி 19, 2011 – சூன் 26, 2012 | |
முன்னையவர் | தின்ஷா பட்டேல் |
பின்னவர் | விலாசராவ் தேசுமுக் |
இரும்புத் துறை அமைச்சர் | |
பதவியில் மே 28, 2009 – சனவரி18, 2011 | |
முன்னையவர் | ராம் விலாஸ் பாஸ்வான் |
பின்னவர் | பெனிப் பிரசாத் வர்மா |
தொழில்துறை இணை அமைச்சர் | |
பதவியில் செப்டம்பர் 1982 – ஏப்ரல் 1983 | |
சுற்றுலா மற்றும் உள்நாட்டு வான்துறை இணை அமைச்சர் | |
பதவியில் திசம்பர் 1976 – மார்ச்சு 1977 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 சூன் 1934 சாரஹான், சிம்லா |
இறப்பு | 8 சூலை 2021 87) சிம்லா, இமாச்சலப் பிரதேசம் | (அகவை
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பிரதிபா சிங் |
பிள்ளைகள் | விக்ரமாதித்ய சிங் |
வாழிடம்(s) | பதம் அரண்மனை, ராம்பூர் புசாகர், சிம்லா மாவட்டம் |
வீரபத்ர சிங் இராசபுத்திர குடும்பமொன்றில் சிம்லா மாவட்டத்தில் உள்ள சாரஹானில் சூன் 23,1934இல் பிறந்தார்.[2][3] புசாகிர் மன்னரான சேர் பதம் சிங்கிற்கு வாரிசாகப் பிறந்து 1947ஆம் ஆண்டில், தமது 13வது அகவையில், சமத்தானத்தின் மன்னராக பதவி ஏற்றார்.
சிங் தெகராடூனில் உள்ள கேனல் பிரவுன் கேம்பிரிட்ஜ் பள்ளியிலும் சிம்லாவிலுள்ள பிஷப் காட்டன் பள்ளியிலும் பயின்றார். பின்னர் தில்லியில் உள்ள செயின்ட் இசுடீபன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]
சூன் 2, 1954இல் இளவரசி இரத்னகுமாரியை திருமணம் புரிந்தார்.இவர்களுக்கு ஒரு மகனும் ஐந்து மகள்களும் பிறந்தனர். 1985இல் பிரதிபா சிங்கை மணந்து ஒரு மகனையும் மகளையும் பெற்றுள்ளார்.
மாரடைப்பு காரணமாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சூலை 8, 2021 அன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார்.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.