ஜெமிந்தா
மலேசியா, ஜொகூர், சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்/முக்கிம் / From Wikipedia, the free encyclopedia
ஜெமிந்தா, (மலாய்: Jementah; ஆங்கிலம்: Jementah; சீனம்: 杰门塔; ஜாவி: جمنتة) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம். இந்த நகரம் சிகாமட் நகரத்திற்கு மேற்கே அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் ஜெமிந்தா, நாடு ...
ஜெமிந்தா | |
---|---|
Jementah | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 2°26′N 102°41′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | சிகாமட் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 228 km2 (88 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 18,823 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 85200 |
இடக் குறியீடு | +6-772 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
மூடு
ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து வடக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும்; சிகாமட் நகரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவிலும் ஜெமெந்தா நகரம் அமைந்துள்ளது.
ஜெமிந்தா நகரின் உட்பகுதியில் உள்ள நாகப்பா தோட்டத்தில் தமிழர்கள் கணிசமான அளவிற்கு இன்றும் வாழ்கிறார்கள். 1990-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி அந்தத் தோட்டத்தில் 279 தமிழர்கள்; 42 சீனர்கள்; 108 மலாய்க்காரர்கள் வேலை செய்தார்கள்.[1] இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி.