From Wikipedia, the free encyclopedia
ஜெட் லைட் லிமிடெட்டின் சந்தைப் பெயர் ஜெட்கனெக்ட் (JetKonnect) ஆகும். முதலில் இது ஜெட் ஏர்வேஸ் கனெக்ட் என அழைக்கப்பட்டது. ஜெட் லைட் லிமிடெட் மும்பையினை மையமாகக் கொண்டு செயல்படும் விமான சேவையாகும்.[2] ஜெட் ஏர்வேஸ்க்கு சொந்தமான இந்த நிறுவனம், இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களை இணைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
| |||||||
நிறுவல் | 1991 (சஹாரா ஏர்லைன்ஸ்) | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | |||||||
இரண்டாம் நிலை மையங்கள் | |||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | ஜெட் பிரிவிலெஜ் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 19 (+ 6 orders)[1] | ||||||
சேரிடங்கள் | 42 | ||||||
தாய் நிறுவனம் | டெயில்வின்ட்ஸ் லிமிட்டெடு | ||||||
தலைமையிடம் | மும்பை, இந்தியா | ||||||
முக்கிய நபர்கள் | நரேஷ் கோயல் (உரிமையாளர்) | ||||||
வலைத்தளம் | http://www.jetkonnect.com |
இந்த விமானச் சேவை செப்டம்பர் 20, 1991 ல் நிறுவப்பட்டது. இருப்பினும் இதன் செயல்பாடுகள் டிசம்பர் 3, 1993 ஆம் ஆண்டு முதல் இரு போயிங்க் 737-200 விமானங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டன. சஹாரா விமான சேவையாகத்தான் இதன் செயல்பாடுகள் இருந்தன. ஆரம்ப காலத்தில் இதன் சேவைகள் வடஇந்தியாவில் மட்டும் இருந்தாலும் பின்பு இந்தியா முழுவதும் விரிவாக்கப்பட்டது. சஹாரா நிறுவனத்தின் இந்த விமானசேவை “ஏர் சஹாரா” என அக்டோபர் 2, 2000 மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் பதிவு செய்யப்பட்ட பெயராக சஹரா ஏர்லைன்ஸே இருந்தது. மார்ச் 22, 2004 ல் சர்வதேச விமான சேவையாக உயர்ந்தது. சர்வதேச விமானசேவையின் முதல் படியாக சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானத்தினை அனுப்பியது பின்பு லண்டன்[3], சிங்கப்பூர், மாலத்தீவுகள்[4] மற்றும் காட்மாண்டூ எனத் தனது சேவையினை பெருக்கிக்கொண்டது. இந்த விமானச் சேவையின் நிலையின்மை காரணத்தால், இதன் இந்திய உள்நாட்டு வான்வழிப் போக்குவரத்துச் சந்தைப் பங்குகளின் விலை ஜனவரி 2006 இல் 11% இருந்து ஏப்ரல் 2007 இல் 8.5% ஆகக் குறைந்தது.
ஜெட் ஏர்வேஸ் ஜனவரி 19, 2006 ல் 500 மில்லியன் டாலர்கள் கொடுத்து ஏர் சஹாராவினை வாங்க முன்வந்தது.[5] ஆனால் விலை மற்றும் தலைவர் நியமனம் ஆகியவற்றில் முரண்பட்டக் காரணங்களால் அம் முயற்சி கைவிடப்பட்டது முதல் பரிசீலணையின் தோல்விக்குப் பிறகு ஏப்ரல் 12, 2007 ல் ஜெட் ஏர்வேஸ் 340 மில்லியன் டாலர்களுக்கு ஏர் சஹாராவினை வாங்கியது இத் தொகை இந்திய மதிப்பின் படி 14.50 மில்லியன் ரூபாய் ஆகும். பின்னர் ஏர் சஹாரா இனி ஜெட் லைட் என்ற பெயருடன் இயங்கும் என ஏப்ரல் 16 ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் அறிவித்தது.
மார்ச் 20, 2012 ல் ஜெட்லைட், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குள் ஒன்றானது. இதன் மூலம் ஜெட்கனெக்ட் ஒரு தனிப்பட்ட விமானசேவை நிறுவனமாக வெளிப்பட்டது.[6]
அக்டோபர் 2013 ன் படி, ஜெட்கனெக்ட் பின்வரும் நகரங்களுக்கு தனது சேவையினைப் புரிகிறது.[7]
இந்தியாவின் 55 இடங்களுக்கான விமானசேவையினை ஜெட் கனெக்ட் விமான சேவை செய்கிறது. போயிங்க் 737 ரக, 15 விமானங்களைக் கொண்ட குழுவாக ஜெட் கனெக்ட் செயல்படுகிறது.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.