![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/Pakatan-harapan-logo.svg/langta-640px-Pakatan-harapan-logo.svg.png&w=640&q=50)
ஜனநாயக செயல் கட்சி
From Wikipedia, the free encyclopedia
ஜனநாயக செயல் கட்சி அல்லது ஜசெக (ஆங்கிலம்: Democratic Action Party (DAP); மலாய்: Parti Tindakan Demokratik; சீனம்: 民主行动党) என்பது மலேசியாவின் முக்கிய மூன்று எதிர்க் கட்சிகளில் ஒன்றாகும்.[4] 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை உருவாக்கின.[5]
ஜனநாயக செயல் கட்சி Democratic Action Party Parti Tindakan Demokratik 民主行动党 ڤرتي تيندقن ديموکراتيک | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | DAP |
செயலாளர் நாயகம் | அந்தோனி லோக் |
தேசிய தலைவர் | லிம் குவான் எங் |
தேசிய துணைத் தலைவர் | கோவிந்த் சிங் தியோ |
தேசிய உதவித் தலைவர் |
|
துணை தலைமைச் செயலாளர் |
|
குறிக்கோளுரை | மலேசிய மலேசியர் |
தொடக்கம் | 11 அக்டோபர் 1965; 58 ஆண்டுகள் முன்னர் (1965-10-11) |
சட்ட அனுமதி | 18 மார்ச்சு 1966; 58 ஆண்டுகள் முன்னர் (1966-03-18) |
பிரிவு | மக்கள் செயல் கட்சி (சிங்கப்பூர்) |
முன்னர் | மலாயா மக்கள் செயல் கட்சி (People's Action Party of Malaya) |
தலைமையகம் | Jalan Yew, 55100 கோலாலம்பூர் |
செய்தி ஏடு | ராக்கெட் கினி (Rocket Kini) |
உறுப்பினர் (2022) | 875,584 |
கொள்கை |
|
அரசியல் நிலைப்பாடு | மத்திய-இடது அரசியல்[3] |
தேசியக் கூட்டணி | காகாசான் ராக்யாட் (1990–1996) மாற்று முன்னணி (1999–2004) பாக்காத்தான் ராக்யாட் (2008–2015) பாக்காத்தான் அரப்பான் (2015 முதல்) |
நிறங்கள் | சிகப்பு வெள்ளை நீலம் |
பண் | Berjuang Untuk Rakyat Malaysia! (Fighting for the Malaysian People!) |
மேலவை (2024) | 4 / 70 |
மக்களவை (2024) | 40 / 222 |
சட்டமன்றங்கள் (2024) | 90 / 611 |
மந்திரி பெசார் (2024) | 1 / 13 |
தேர்தல் சின்னம் | |
![]() சரவாக் தவிர்த்து ![]() சரவாக் மட்டும் | |
கட்சிக்கொடி | |
![]() | |
இணையதளம் | |
www |
பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் நான்கு கூறுக் கட்சிகளில் ஒன்றாக இந்தக் கட்சி, 2018 மலேசியப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணியைத் தோற்கடித்து நடுவண் அரசாங்கத்தை அமைத்தது. இதற்கு முன்னர் இந்தக் கட்சி 53 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இயங்கியது.
ஆயினும், பாக்காத்தான் அரப்பான் கூட்டணி அதன் முதல் பதவிக் காலத்தை முடிப்பதற்கு முன்பு, அதன் பங்காளிக் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகின. அதனால், பாக்காத்தான் அரப்பான் கூட்டணி 22 மாதங்களுக்குப் பிறகு அதிகாரத்தை இழந்தது. இதுவே 2020 மலேசிய அரசியல் நெருக்கடிக்கும் வழிவகுத்தது.[6] பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த ஜசெக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பெரும்பான்மை இல்லாமல் இருந்தாலும், அது தன் அரசியல் போட்டியாளர்களுடன் இணைந்து, மலேசியாவில் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது.