From Wikipedia, the free encyclopedia
சோடியம் தையோசயனேட்டு (Sodium thiocyanate ) என்பது NaSCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். சிலவேளைகளில் இதைச் சோடியம் சல்போசயனைடு என்றும் அழைக்கிறார்கள். நிறமற்றதாகவும் நீர்த்துப் போகக்கூடியதாகவும் உள்ள இவ்வுப்புதான் தயோசயனேட்டு என்னும் எதிர்மின் அயனிக்கு பிரதானமான ஆதாரமாக உள்ளது, அதேபோல மருந்து வகைகள் மற்றும் சிலவகை சிறப்பு வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளிலும் இது பயன்படுகிறது[2] . தனிமநிலை கந்தகத்தை சயனைடுடன் வினைப்படுத்துவதன் மூலம் குறிப்பாக தையோசயனேட்டு உப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் தையோசயனேட்டு | |||
வேறு பெயர்கள்
சோடியம் ரோடனைடு சோடியம் சல்போசயனேட்டு சோடியம் ரோடனேட்டு தையோசயனிக் அமிலம்,சோடியம் உப்பு | |||
இனங்காட்டிகள் | |||
540-72-7 | |||
ChEBI | CHEBI:30952 | ||
ChEMBL | ChEMBL1644028 ChEMBL84336 ChEMBL1078613 | ||
ChemSpider | 10443 | ||
EC number | 208-754-4 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 516871 | ||
வே.ந.வி.ப எண் | XL2275000 | ||
| |||
UNII | 5W0K9HKA05 | ||
பண்புகள் | |||
NaSCN | |||
வாய்ப்பாட்டு எடை | 81.072 கி/மோல் | ||
தோற்றம் | பளபளப்பான நிறமற்ற படிகங்கள் | ||
அடர்த்தி | 1.735 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 287 °C (549 °F; 560 K) | ||
கொதிநிலை | 307 °C (585 °F; 580 K) | ||
139 கி/100 மி.லி (21 °செ) 225 கி/100மி.லி (100 °செ) | |||
கரைதிறன் | அசிட்டோன், ஆல்ககால்கள், அமோனியா, SO2ஆகியனவற்றில் கரையும். | ||
காடித்தன்மை எண் (pKa) | -1.28 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.545 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | சாய்சதுரம் | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0675 | ||
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) | ||
R-சொற்றொடர்கள் | R20/21/22, R32, R36, R37, R38 | ||
S-சொற்றொடர்கள் | S22, S26, S36 | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
764 mg/kg (வாய்வழி, எலி)[1] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் சயனேட்டு சோடியம் சயனைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | பொட்டாசியம் தையோசயனேட்டு அமோனியம் தையோசயனேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
சோடியம் தையோசயனேட்டு நேர் சாய்சதுர வடிவமைப்பில் படிகமாகிறது. ஒவ்வொரு சோடிய அயனி மையமும் மூவணு தையோசயனேட்டு அயனிகளால் வழங்கப்பட்ட மூன்று கந்தகம் மற்றும் மூன்று நைட்ரசன் ஈந்தணைவிகளால் சூழப்பட்டுள்ளன[3]. பொதுவாக இது ஆய்வகங்களில் Fe3+ அயனிகளின் இருப்பைக் கண்டறிய உதவும் சோதனையில் பயன்படுகிறது.
ஆல்க்கைல் ஆலைடுகளை அவை சார்ந்த ஆல்க்கைல் தையோசயனேட்டுகளாக மாற்றும் வினைகளில் சோடியம் தையோசயனேட்டு பயன்படுகிறது. அமோனியம் தையோசயனேட்டு மற்றும் பொட்டாசியம் தையோசயனேட்டு போன்ற மிகவும் நெருங்கிய தொடர்புள்ள செயலிகள் தண்ணீரில் இருமடங்கு கரைதிறனைக் கொண்டுள்ளன. வெள்ளி தையோசயனேட்டுகளையும் இதற்காகப் பயன்படுத்தலாம். கரையாத வெள்ளி ஆலைடுகளை வீழ்படிவாக்கி அவற்றை தொடர்நடவடிக்கைகளை எளிமைப்படுத்த பயன்படுத்தலாம். ஐசோபுரோபைல் புரோமைடுடன் சோடியம் தையோசயனேட்டை சூடான எத்தனால் கரைசலில் வினைப்படுத்தும்போது ஐசோபுரோபைல் தையோசயனேட்டு உருவாக உதவுகிறது[4] . சோடியம் தையோசயனேட்டை புரோட்டானேற்றம் செய்வதன் மூலமாக ஐசோதையோசயனிக்கமிலம் உருவாகிறது. S=C=NH (pKa = -1.28)[5] . சோடியம் தையோசயனேட்டில் இருந்து பெறப்படும் இவ்வமிலத்தை கரிம அமீன்களுடன் சேர்த்து தையோயூரியா வழிபொருட்களைத் தயாரிக்க முடியும்[6].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.