![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/Xuanzang_w.jpg/640px-Xuanzang_w.jpg&w=640&q=50)
சுவான்சாங்
From Wikipedia, the free encyclopedia
சுவான்சாங் (யுவான் சுவாங்) (பொ.ஊ. 602–664) என்பவர் ஒரு புகழ் பெற்ற சீன மதகுருவும், கல்வியாளரும், பயணியும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது பயணங்கள், சீனாவின் தொடக்க தாங் காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தின. தனது 17 ஆண்டுகள் பிடித்த இந்தியாவுக்குச் சென்று சீனா திரும்பிய பயணத்தின் மூலம் இவர் பெரும் புகழ் எய்தினார். தனது பயணம் பற்றிய விபரங்களை அவர் தனது தன்வரலாற்றில் குறித்துள்ளார்.[1]
விரைவான உண்மைகள் யுவான் சுவாங், சுய தரவுகள் ...
யுவான் சுவாங் | |
---|---|
![]() யுவான் சுவாங்கின் ஓவியம். சப்பான், கமகுரா காலம் (14ஆம் நூற்றாண்டு). | |
சுய தரவுகள் | |
பிறப்பு | (602-04-06)6 ஏப்ரல் 602 |
இறப்பு | 5 பெப்ரவரி 664(664-02-05) (அகவை 61) தோங்சுவான், சென்சி மாகாணம், சீனா |
சமயம் | பௌத்தம் |
பாடசாலை | கிழக்கு ஆசிய யோகசரா |
பதவிகள் | |
மாணவர்கள் |
மூடு