From Wikipedia, the free encyclopedia
சுருப்பக் (Shuruppak), மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் பாயும் யூப்பிரடிஸ் ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். இந்நகரம் நின்லில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1] சுமேரிய நகரமான இது நிப்பூர் நகரத்திற்கு தெற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது தற்கால ஈராக் நாட்டின் அல் - காதிசிய மாகாணத்தில் உள்ளது. சுருப்பக் தொல்லியல் மேடு 120 எக்டேர் பரப்பளவும், 3 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை உயரமும் கொண்டது.
சுருப்பக் | |
---|---|
இருப்பிடம் | அல் - காதிசிய மாகாணம், இராக் |
பகுதி | சுமேரியா |
ஆயத்தொலைகள் | 31°46′39″N 45°30′35″E |
வகை | தொல்லியல் களம், குடியிருப்பு |
பரப்பளவு | 120 எக்டேர் |
உயரம் | 9 மீற்றர் |
வரலாறு | |
காலம் | செம்தேத் நசிர் காலம், மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம், Akkad period, Ur III period |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1902; 1931 |
அகழாய்வாளர் | Robert Koldewey, Friedrich Delitzsch, Erich Schmidt, Harriet P. Martin |
சுருப்பக் தொல்லியல் மேட்டை 1902ல் ராபர்ட் கோல்டவெ மற்றும் பிரடெரிக் எட்டு மாதங்கள் அகழாய்வு மேற்கொண்டனர். [2] அகழாய்வில் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்திய நூற்றுக்கணக்கான களிமண் பலகைகள் கண்டெடுத்தனர். 1931ம் ஆண்டில் நடததப்பட்ட அகழாய்வில் 87 களிமண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1973ல் நடத்தப்பட்ட அகழாய்வில் செம்தேத் நசிர் காலம், அக்காடியப் பேரரசு மற்றும் மூன்றாவது ஊர் வம்ச காலத்திய மட்பாண்டங்கள் மற்றும் சுடுமண் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.[3]2016 முதல் 2018 வரை சுருப்பக் தொல்லியல் மேட்டில் அகழாய்வு செய்யப்பட்டது[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.