மூன்றாவது ஊர் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாவது ஊர் வம்சம் (Third Dynasty of Ur) அல்லது புதிய சுமேரிய பேரரசு என்பது மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் நகரத்தை தலைநகராகக் கொண்டு பாபிலோனியவைக் கிமு 2112 முதல் 2004 முடிய 108 ஆண்டுகள் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.[2][3]



இது அக்காடியப் பேரரசு மற்றும் குடியன் வம்சத்தினர் ஆட்சிக்குப் பின் சுமேரியாவை ஆண்ட இறுதி ஊர் வம்சமாகும். மூன்றாம் ஊர் வம்சத்தின் மன்னர் ஊர்-நம்மு தெற்கு மெசொப்பொத்தேமியாவில் மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியை நிறுவினார். மூன்றாவது ஊர் வம்சத்தினர் தற்கால ஈராக், சிரியா, லெபனான் மற்றும் மேற்கு ஈரானிய பகுதிகளை கிமு 2112 முதல் 2004 முடிய ஆண்டனர்.
இவ்வம்சத்தினர் ஊர், இசின், லார்சா, பாபிலோன், மாரி மற்றும் இசுன்னா போன்ற நகர இராச்சியங்களை கைப்பற்றி தங்கள் இராச்சியத்தை விரிவிபடுத்தினர். மேலும் மேல் மெசொப்பொத்தேமியாவின் சசிரா நகரையும் வென்றனர்.[[[[
வீழ்ச்சி
கிமு 2004ல் ஈலம் மக்களின் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்த மூன்றாம் ஊர் வம்சத்தின் பபிலோனியாவை, வெளிநாட்டு அமோரிட்டு மக்கள் வசப்படுத்தினர்.
மூன்றாம் ஊர் வம்ச ஆட்சியாளர்கள்
ஆட்சியாளர் | கிமு |
கிமு |
---|---|---|
உது - ஹெங்கல் | 2119–2113 | 2055–2048 |
ஊர்-நம்மு | 2112–c. 2095 | 2047–2030 |
சுல்கி | 2094–2047 | 2029–1982 |
அமர் - சின் | 2046–2038 | 1981–1973 |
சூ - சின் | 2037–2029 | 1972–1964 |
இப்பி - சின் | 2028–2004 | 1963–1940 |

இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.