![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Sukhoi_T-50_Beltyukov.jpg/640px-Sukhoi_T-50_Beltyukov.jpg&w=640&q=50)
சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ
From Wikipedia, the free encyclopedia
சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ (Sukhoi/HAL FGFA) ஆனது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாகும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஆகும். இது பிஏகே எஃப்ஏ என்ற விமானத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவிருக்கிறது (எஃப்ஜிஎஃப்ஏ-ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என்பது இந்திய பதிப்பின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும்).
விரைவான உண்மைகள் சுகோய் ஐந்தாம் தலைமுறை போர் விமானம், வகை ...
சுகோய் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் | |
---|---|
![]() | |
சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ க்கு அடிப்படையான ரி-50 வானூர்தி | |
வகை | கண்டுபிடிக்க இயலாத வானில் சண்டையிடும் போர்விமானம் / பல்பணி போர் விமானம் |
உருவாக்கிய நாடு | இந்தியா |
உற்பத்தியாளர் | இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் |
வடிவமைப்பாளர் | இந்தியா/ரஷ்யா |
அறிமுகம் | 2017[1][2][3] |
தற்போதைய நிலை | உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது |
முக்கிய பயன்பாட்டாளர் | இந்திய வான்படை |
திட்டச் செலவு | US$ 8-10 பில்லியன்[4][5][6] |
அலகு செலவு | US$100 மில்லியன் (est.)[7] |
முன்னோடி | சுகோய் பிஏகே எஃப்ஏ |
மூடு
இரண்டு வெவ்வேறு மாதிரிகள் ரஷ்யா மற்றும் இந்தியாவால் தனித்தனியாக தயாரிக்கப்படுகிறது. 18 செப்டம்பர் 2008 அன்று நடந்த இந்திய-ரஷ்ய அரசுகளின் கூட்டுக் கூட்ட முடிவிற்கு பின்னர் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் தலைவர் ஏ.கே.பஜ்வா வெளியிட்ட கூற்றுப்படி ரஷ்யாவில் தயாரிக்கப்படுவது ஒற்றை இருக்கையுடனும், இந்தியாவில் தயாரிக்கப்படுவது இரண்டு இருக்கைகளுடனும் தயாரிக்கப்படும்.[8]