சீலாந்தியா
கண்டம் From Wikipedia, the free encyclopedia
கண்டம் From Wikipedia, the free encyclopedia
சீலாந்தியா (Zealandia, /ziːˈlændiə/, மாவோரி: Te Riu-a-Māui,[2] தாசுமான்டிசு (Tasmantis) அல்லது நியூசிலாந்து கண்டம் எனப்படுவது பெரும்பாலும் மூழ்கியுள்ள கண்டப்பகுதியாகும். இது அந்தாட்டிக்காவிலிருந்து 85 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் தொடர்ந்து ஆத்திரேலியாவிலிருந்து 60–85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் பிரிந்து நீரில் அமிழ்ந்த கண்டப்பகுதியாகும்.[3] இது 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் முழுமையாக மூழ்கியிருந்திருக்கலாம்;[4][5] இன்றும் பெருமளவு (93%) அமைதிப் பெருங்கடலில் அமிழ்ந்துள்ளது.[6]சதாம் தீவுகளுக்கு தெற்கேயுள்ள போல்லோன் கடல்மலை சிலாந்தியாவுடன் எவ்வளவு வலிவாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
சிலாந்தியா நியூசிலாந்தின் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் உதவியாக உள்ளது; நியூசிலாந்தின் இயற்கைவளிக் களம் சீலாந்தின் தரநாக்கிப் பகுதியில் உள்ளது. 2007இல் பெரும் தென் கிண்ணப் பகுதியில் எண்ணெய் முற்றாய்விற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.[7] கடலுக்கடியிலான கனிமங்களாக இரும்பு, எரிமலைசார் சல்பைடுகள், பெரோமங்கனீசு கணுக்களின் படிவுகள் உள்ளன.[8]
மொத்த மக்கள்தொகை: 4,685,000
சிலாந்தியா ஒரு புவியியல் கண்டமே என்றும், அது ஒரு கண்டத்திட்டோ அல்லது குறுங்கண்டமோ அல்ல என்றும் அமெரிக்க புவியியல் கழகம் 2017 பெப்ரவரியில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.[9][10][11][12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.