![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Sungai_Hulu_Selangor_-_panoramio.jpg/640px-Sungai_Hulu_Selangor_-_panoramio.jpg&w=640&q=50)
சிலாங்கூர் ஆறு
From Wikipedia, the free encyclopedia
சிலாங்கூர் ஆறு (மலாய்: Sungai Selangor; ஆங்கிலம்: Selangor River); மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், உலு சிலாங்கூர் மாவட்டம்; கோலா சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களைக் கடந்து செல்லும் ஆறாகும். அத்துடன் சிலாங்கூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.[2]
விரைவான உண்மைகள் சிலாங்கூர் ஆறுSelangor River, அமைவு ...
Selangor River | |
---|---|
![]() | |
அமைவு | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டங்கள் | உலு சிலாங்கூர் கோலா சிலாங்கூர் கோம்பாக் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | நுவாங் மலை Gunung Nuang |
⁃ அமைவு | சிலாங்கூர்; பகாங் |
⁃ ஆள்கூறுகள் | 3°34′21″N 101°42′19″E |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | மலாக்கா நீரிணை |
⁃ ஆள்கூறுகள் | 3°20′26″N 101°13′59″E |
நீளம் | 110 km (68 mi)[1] |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | குந்தாங் ஆறு; பத்தாங்காலி ஆறு; ரெனிங் ஆறு |
⁃ வலது | திங்கி ஆறு |
ஆற்றுப் படுகை | 2176 ச.கி.மீ. |
மூடு
இந்த ஆறு சிலாங்கூர் வரலாற்றில் மிக ஆழமான தடங்களைப் பதித்து உள்ளது. அதனால் தான் இந்த ஆற்றுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[1]
சிலாங்கூர் மாநிலத்தின் கிழக்கில் கோலா குபு பாரு (Kuala Kubu Bharu) நகரின் வழியாகப் பயணித்து; மேற்கில் கோலா சிலாங்கூர் (Kuala Selangor) நகர் வரை தொடர்ந்து; இறுதியில் மலாக்கா நீரிணையில் கலக்கிறது.