![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/Sarawaksibu.png/640px-Sarawaksibu.png&w=640&q=50)
சிபு பிரிவு
சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவு / From Wikipedia, the free encyclopedia
சிபு பிரிவு (மலாய் மொழி: Bahagian Sibu; ஆங்கிலம்: Sibu Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும்.
விரைவான உண்மைகள் சிபு பிரிவு, நாடு ...
சிபு பிரிவு | |
---|---|
Sibu Division | |
சரவாக் | |
![]() சரவாக் மாநிலத்தில் சிபு பிரிவு | |
ஆள்கூறுகள்: 02°17′16″N 111°49′51″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | சிபு பிரிவு |
நிர்வாக மையம் | சிபு |
உள்ளூர் நகராட்சி | சிபு நகராண்மைக் கழகம் Sibu Municipal Council (SMC) |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,278.3 km2 (3,196.3 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,93,514 |
• அடர்த்தி | 35/km2 (92/sq mi) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | QS |
மூடு
இந்தப் பிரிவு 8,278.3 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு (Kapit Division) மற்றும் மிரி பிரிவுக்கு (Miri Division) அடுத்த நிலையில், மூன்றாவது பெரிய பிரிவு.
2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிபு பிரிவின் மக்கள் தொகை 257,300 ஆகும். இன ரீதியாக, மக்கள்தொகை பெரும்பாலும் இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் மக்களாகும்.