திரிபுராவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
சிபாகிஜாலா மாவட்டம், வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவின் 8 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையிடம் விசால்கர் நகரம். இது மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் இருந்து 2012 ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்டது.[1][2] இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண்மை இரப்பர் தோட்டகள் ஆகும். இம்மாவட்டத்தில் சிபாகிஜாலா காட்டுயிர் சரணாலயம் உள்ளது.
சிபாகிஜாலா | |
---|---|
மாவட்டம் | |
திரிபுராவில் சிபாகிஜாலா மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
நிறுவிய ஆண்டு | 2012 |
தலைமையிடம் | விசால்கர் |
பரப்பளவு | |
• Total | 1,043.04 km2 (402.72 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 5,42,731 |
• அடர்த்தி | 520/km2 (1,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://sepahijala.nic.in |
1043.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் சோனாமுரா, பிஷால்கர், ஜம்புய்ஜாலா என 3 வருவாய் வட்டங்களும், 7 ஊராடசி ஒன்றியங்களும், 169 கிராம ஊராட்சிகளும், 2 நகராட்சிகளும், 1 பேரூராட்சியும் கொண்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,42,731 ஆகும்.[3] சராசரி எழுத்தறிவு 98% ஆகும்.[4]
இந்த மாவட்டம் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[5].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.