சின்ஹகட்
From Wikipedia, the free encyclopedia
சின்ஹகட் (Sinhagad) என்னும் கோட்டை, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் புனேவுக்கு தெற்கில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கொண்டாணா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு சிங்கத்தின் கோட்டை என்று பொருள். இந்த கோட்டை இரு வாயில்களை கொண்டது. அவை புனே தர்வாஜா என்றும், கல்யாண் தர்வாஜா என்றும் அழைக்கப்படுகின்றன.[1] சின்ஹகட் என்பது "சிம்மக் கோட்டை" எனப் பொருள்படும்.
விரைவான உண்மைகள் சின்ஹகட்- கொண்டணா, உயர்ந்த புள்ளி ...
சின்ஹகட்- கொண்டணா | |
---|---|
சின்ஹகட் கோட்டை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,312 m (4,304 அடி) |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | सिंहगड |
பெயரின் மொழி | மராத்தி |
புவியியல் | |
அமைவிடம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் |
மூடு
இந்த கோட்டையில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் கோபுரம் வைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேல் பகுதியில் தங்குவதற்கான அறைகள் உள்ளன.[2][3]
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தனித்துள்ள ஒரு மலையுச்சியின் மீதமைந்திருக்கும் இக்கோட்டை, தரையிலிருந்து 760 மீட்டர்கள் (2,490 அடி) உயரத்திலும், சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 1,317 மீட்டர்கள் (4,321 அடி) உயரத்திலுமுள்ளது.[4][5]