சின் பெயின்
From Wikipedia, the free encyclopedia
சின் பெயின் (Sinn Féin[13] ஐரிய மொழியில் "நாம்" நாமே)[14] என்பது அயர்லாந்து குடியரசு, வட அயர்லாந்து நாடுகளில் இயங்கும் ஓர் ஐரிய குடியரசுவாத[2] சனநாயக சோசலிச[2] அரசியல் கட்சி ஆகும்.
சின் பெயின் Sinn Féin | |
---|---|
![]() | |
நிறுவனர் | ஆர்தர் கிரிபித் |
தலைவர் | மேரி லூ மெக்டொனால்ட் |
துணைத் தலைவர் | மிசேல் ஓ'நீல் |
தொடக்கம் |
|
தலைமையகம் | 44 பார்னெல் சதுக்கம், டப்லின் 1, அயர்லாந்து |
செய்தி ஏடு | ஆன் பொப்லாக்ட் |
இளைஞர் அமைப்பு | ஓக்ரா சின் பெயின் |
நநஈதி பிரிவு | சின் பெயின் LGBTQ[1] |
வெளிநாட்டுப் பிரிவு | சின் பெயினின் நண்பர்கள் |
கொள்கை | ஐரிய குடியரசுவாதம்[2] சனநாயக சோசலிசம்[2] இடதுசாரி தேசியவாதம்[3] |
அரசியல் நிலைப்பாடு | நடு-இடது[4] இடதுசாரி வரை[5] |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் – GUE/NGL |
கீழவை[6] | 36 / 160 |
மேலவை[7] | 4 / 60 |
வட அயர்லாந்து சட்டமன்றம்[8] | 27 / 90 |
மக்களவை (வ.அ இடங்கள்)]][9] | 7 / 18 |
ஐரோப்பிய நாடாளுமன்றம்[10] | 1 / 13 |
அயர்லாந்து உள்ளாட்சிகள்[11] | 80 / 949 |
வட அயர்லாந்து உள்ளாட்சிகள்[12] | 104 / 462 |
இணையதளம் | |
www![]() | |
தொடக்க கால சின் பெயின் அமைப்பு 1905 இல் ஆர்தர் கிரிபித் என்பவரால் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பின் உறுப்பினர்கள் அயர்லாந்து விடுதலைக்கான போரில் புரட்சிகர அயர்லாந்துக் குடியரசை நிறுவியவர்கள். அயர்லாந்து உள்நாட்டுப் போரில் இவ்வமைப்பு இரண்டு கட்சிகளாக உடைந்தது. இன்றைய சின் பெயின் கட்சி 1970 இல் மேலும் பிளவடைந்து உருவானது. மற்றைய பிரிவு தொழிலாளர் கட்சியாக உருவானது. வட அயர்லாந்து மோதல்களின் போது, சின் பெயின் ஐரியக் குடியரசுப் படை (ஐ.ஆர்.ஏ) உடன் இணைந்து பணியாற்றியது.[15] சின் பெயின் கட்சி உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டாலும், பிரித்தானிய நாடாளுமன்றம், ஐயர்லாந்து நாடாளுமன்றங்களில் வாக்களிக்காத கொள்கையைக் கொண்டிருந்தது. 1983 இல் ஜெரி ஆடம்சு கட்சித் தலைவரானதை அடுத்து, தேர்தல் அரசியல் அதிக முக்கியத்துவம் பெற்றது. 1986 இல் கீழவையில் "வாக்களிக்காத கொள்கை"யைக் கைவிட்டது. இதற்கு எதிராக அக்கட்சியின் சிர் குடியரசு சின் பெயின் என்ற கட்சியைத் தொடங்கினர். 1990களில், செரி ஆடம்சு, மார்ட்டின் மெக்கினசு தலைமையில் வட அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இது பெல்பாஸ்ட் உடன்பாட்டுக்கு வழிவகுத்து, வட அயர்லாந்து சட்டமன்றத்தை உருவாக்கியது. 2006 இல் வட அயர்லாந்து காவல்துறை சேவையை உருவாக்கிய செயின்ட் ஆன்ட்ரூசு உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
வட அயர்லாந்து சட்டமன்றத்தில் சின் பெயின் ஐரியத் தேசியவாதத்தின் வரலாற்றில் முதல் தடவையாக அது 2022 மே மாத தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.[16][17] 2007 முதல் 2022 வரை வட அயர்லாந்து சட்டமன்றத்தில் சனநாயக ஒன்றியக் கட்சிக்கு அடுத்தபடியாக சென் பெயின் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக இருந்து வந்தது. சின் பெயினின் உறுப்பினர்கள் துணை முதலமைச்சராகப் பதவியில் இருந்து வந்தனர். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில், சின் பெயினிடம் ஏழு தொகுதிகள் உள்ளன. ஆனாலும், அது அங்கு "வாக்களிக்காத கொள்கை"யைக் கடைப்பிடித்து வருகிறது. அயர்லாந்து கீழவையில் சின் பெயின் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.
கட்சியின் தற்போதைய தலைவர் மேரி லூ மெக்டொனால்ட் ஆவார். இவர் 2018 இல் செரி ஆடம்சிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.