சிட்டகாங் கோட்டம்
வங்காளதேச கோட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிட்டகாங் கோட்டம் (Chittagong Division) (வங்காள மொழி: চট্টগ্রাম বিভাগ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் நிர்வாகத்திற்காக எட்டு கோட்டங்கள் நிறுவப்பட்டது. அவ்வெட்டுக் கோட்டங்களில் ஒன்றே சிட்டகாங் கோட்டம் ஆகும். சிட்டகாங் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சிட்டகாங் நகரம் ஒரு பெருநகர மாநகராட்சியாகும்.
விரைவான உண்மைகள் சிட்டகாங் கோட்டம் চট্টগ্রাম বিভাগ, நாடு ...
சிட்டகாங் கோட்டம்
চট্টগ্রাম বিভাগ | |
---|---|
வங்காளதேச கோட்டங்கள் | |
வங்காளதேசத்தில் சிட்டகாங் கோட்டத்தின் அமைவிடம் | |
சிட்டகாங் கோட்டத்தின் மாவட்டங்கள் | |
நாடு | வங்காளதேசம் |
தலைமையிடம் | சிட்டகாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 33,771.18 km2 (13,039.13 sq mi) |
மக்கள்தொகை (2011 census) | |
• மொத்தம் | 2,84,23,019 |
• அடர்த்தி | 840/km2 (2,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (வங்காளதேச சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | BD-B |
மூடு
வங்காளதேசத்தின் தூர தென்கிழக்கில் அமைந்த சிட்டகாங் கோட்டம் மற்ற கோட்டங்களை விட பரப்பளவில் பெரியதாகும். 2,84,23,019 மக்கள் தொகை கொண்ட சிட்டகாங் கோட்டத்தின் பரப்பளவு 33908.55 சதுர கிலோ மீட்டராகும்.[1] சிட்டகாங் கோட்டத்தில் உள்ள காக்ஸ் பஜார் கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
இக்கோட்டம் 11 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.