சாங்ச்சன் (Changchun, எளிய சீனம்: 长春; மரபுவழிச் சீனம்: 長春; பின்யின்: Chángchūn) சிலின் மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமுமாகும். இது வடகிழக்கு ஆசியாவின் மைய நகரமும் ஆகும்.[5] சோங்லியோ சமவெளியின் மையத்தில் அமைந்துள்ள சாங்ச்சன் 7 மாவட்டங்களும் 1 கவுன்ட்டிகளும் 2 நாடு தழுவிய நகரங்களுமாக ஓர் துணை-மாகாண நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது.[6] 2010 கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 7,674,439. இதில் 5 மாவட்டங்களையும் 4 வளர்ச்சித் திட்டப்பகுதிகளையும் கொண்ட நகரியப் பகுதியின் (பெருநகரப் பகுதி) மக்கள்தொகை 3,815,270.[3] வடகிழக்குச் சீனாவில் இதுவே பெரிய தொழிலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் மற்றும் போக்குவரத்து மையமாக விளங்குகின்றது.
மேலதிகத் தகவல்கள் சாங்ச்சன் 长春市, நாடு ...
சாங்ச்சன்
长春市 |
---|
மாவட்டநிலை & துணை-மாகாண நகரம் | ![மேலிருந்து வலச்சுற்றாக: ஜி கோபுரத்திலிருந்து அகலப் பரப்புக் காட்சி, முன்னாள் மஞ்சுக்கோ அரசுத் துறை, பண்பாட்டுச் சதுக்கத்தில் சிலை, சாங்ச்சன் கிறித்தவ தேவாலயம், சோவியத் தியாகியர் நினைவிடம்.](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0e/Changchun_Montage_2017.png/250px-Changchun_Montage_2017.png) மேலிருந்து வலச்சுற்றாக: ஜி கோபுரத்திலிருந்து அகலப் பரப்புக் காட்சி, முன்னாள் மஞ்சுக்கோ அரசுத் துறை, பண்பாட்டுச் சதுக்கத்தில் சிலை, சாங்ச்சன் கிறித்தவ தேவாலயம், சோவியத் தியாகியர் நினைவிடம். | அடைபெயர்(கள்): 北国春城 (வடநாட்டின் வசந்த நகரம்) | ![சீனாவில் சிலின் மாகாணமும் (இளஞ்சாம்பல்) சிலினில் சாங்ச்சனின் அமைவிடமும் (மஞ்சள்)](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/70/Location_of_Changchun_Prefecture_within_Jilin_%28China%29.png/250px-Location_of_Changchun_Prefecture_within_Jilin_%28China%29.png) சீனாவில் சிலின் மாகாணமும் (இளஞ்சாம்பல்) சிலினில் சாங்ச்சனின் அமைவிடமும் (மஞ்சள்) | | ஆள்கூறுகள்: 43°53′13″N 125°19′29″E | நாடு | சீன மக்கள் குடியரசு |
---|
மாகாணம் | சிலின் மாகாணம் |
---|
நாடு தழுவிய கோட்டங்கள் | 7 மாவட்டங்கள் 2 நாடு-தழுவிய கோட்டங்கள் 1 கவுன்ட்டி |
---|
நிறுவப்பட்டது (ஊர்) | 1889 |
---|
நிறுவப்பட்டது (நகரம்) | 1932 |
---|
அரசு |
---|
• கட்சி செயலர் | வாங் சுங்செங் |
---|
• நகரத்தந்தை | வெற்றிடம் |
---|
பரப்பளவு |
---|
• மாவட்டநிலை & துணை-மாகாண நகரம் | 20,604 km2 (7,955 sq mi) |
---|
• நகர்ப்புறம் | 803 km2 (310 sq mi) |
---|
• மாநகரம் | 3,061 km2 (1,182 sq mi) |
---|
ஏற்றம் | 222 m (730 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• மாவட்டநிலை & துணை-மாகாண நகரம் | 76,74,439 |
---|
• அடர்த்தி | 370/km2 (960/sq mi) |
---|
• நகர்ப்புறம் | 35,75,000 |
---|
• நகர்ப்புற அடர்த்தி | 4,500/km2 (12,000/sq mi) |
---|
• பெருநகர் | 38,15,270 |
---|
• பெருநகர் அடர்த்தி | 1,200/km2 (3,200/sq mi) |
---|
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
---|
அஞ்சல் குறியீடு | 130000 |
---|
இடக் குறியீடு | 0431 |
---|
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-JL-01 |
---|
தானுந்துரிம எண்பலகை முன்னொட்டு | 吉A |
---|
மொ.உ.உ (2010) | CNY 332.9 பில்லியன் |
---|
- தனி நபர் | CNY 43,378 |
---|
இணையதளம் | www.changchun.gov.cn |
---|
[4] |
சாங்ச்சன் | ![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d7/Changchun_name_in_Chinese.svg/100px-Changchun_name_in_Chinese.svg.png) "Changchun" in Simplified Chinese characters | நவீன சீனம் | 长春 |
---|
பண்டைய சீனம் | 長春 |
---|
| Hanyu Pinyin | Chángchūn |
---|
| Literal meaning | "Long Spring" |
---|
|
|
மூடு
சாங்ச்சன் என்ற பெயர் சீனத்தில் "நீண்ட வசந்தம்" எனப் பொருள்படும். 1932க்கும் 1945க்கும் இடையே சாங்ச்சன் சிங்கிங் (Hsinking, எளிய சீனம்: 新京; பின்யின்: Xīnjīng; நேர்பொருளாக "புதிய தலைநகர்") என கைப்பற்றியிருந்த சப்பானியரால் பெயரிடப்பட்டிருந்தது. சப்பானியரின் ஆளுமைக்கு கீழமைந்த மஞ்சுகோ நாட்டின் தலைநகரமாக இருந்தது. 1949இல் சீனா நிறுவப்பட்ட பின்னர் 1954இல் சாங்ச்சன் சிலின் மாகாணத்தின் தலைநகரமாக நிறுவப்பட்டது.