சாகேதம்
ஆண் கொடுக்கப்பட்ட பெயர் / From Wikipedia, the free encyclopedia
சாகேதம் (Saketa) என்பதற்கு சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் தேவர்கள் வாழும் சொர்க்கம் எனப்பொருள்படும். இந்து தொன்மவியலில் சாகேதம் என்பதனை, முக்தி பெற்ற சீவராசிகள் தங்கும் வைகுந்தம் என்றும் அழைப்பர்.[1]
சாகேதம் என்பது இந்துக்களின் புண்ணிய தலமான பண்டைய அயோத்தியின் மற்றுமொரு பெயராகும்.[2][3]
இராமாயண காவியத்தில் அயோத்தி எனும் சாகேதம், கோசல நாட்டின் தலைநகரமாகவும், ராம ஜென்ம பூமியாக விளங்கியதால், இந்நகரம் இந்துக்களின் புனித தலமாக போற்றப்படுகிறது.
மேலும் இந்நகரத்தின் மான் பூங்காவில் கௌதம புத்தர் தங்கி, தம் சீடர்களுக்கு நல்லறம் போதித்தார்.[4]