சவாய் மாதோபூர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சவாய் மாதோபூர் (Sawai Madhopur) (இந்தி: सवाई माधोपुर ), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.
சவாய் மாதோபூர்
सवाई माधोपुर | |
---|---|
நகராட்சி | |
அடைபெயர்(கள்): புலிகளின் நகரம் | |
ஆள்கூறுகள்: 25°59′N 76°22′E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | சவாய் மாதோபூர் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | முதலாம் சவாய் மாதோ சிங் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 59 km2 (23 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,21,106 |
• அடர்த்தி | 2,100/km2 (5,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 322021 |
தொலைபேசி குறியீடு எண் | 07462 |
வாகனப் பதிவு | RJ 25 |
பாலின விகிதம் | 922 / 1000 ♂/♀ |
இணையதளம் | sawaimadhopur.rajasthan.gov.in |
இந்நகரத்தின் அருகில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமான வரலாற்று சிறப்பு மிக்க ரந்தம்பூர் கோட்டை மற்றும் ரண்தம்போர் தேசியப் பூங்காவும் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள முக்கண் விநாயகர் கோயிலும், குகைகளும் புகழ் பெற்றது.
சவாய் மாதோபூர் நகரத்தை, ஜெய்பூர் மகாராஜா முதலாம் சவாய் மாதோ சிங் என்பவரால் திட்டமிட்டு கட்டப்பட்டது. எனவே இந்நகரத்தை அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சவாய் மாதோபூரின் மக்கள் தொகை 1,21,106 ஆகும். [2] மக்கள் தொகையில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.44% ஆகவும், அதில் ஆண்களின் எழுத்தறிவு 90.08% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 67.98% ஆகவுள்ளது. [3]மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 12.89% ஆகவுள்ளனர்.
சமயம் வாரியாக சவாய் மாதோபூர் மக்கள் | ||||
---|---|---|---|---|
இந்து | 74.71% | |||
இசுலாம் | 20.11% | |||
சமணம் | 4.38% | |||
கிறித்தவம் | 0.21% | |||
சீக்கியம் | 0.39% | |||
பிறர் | 0.2% | |||
Distribution of religions |
தில்லி -மும்பை இருப்புப்பாதை தடத்தில் சவாய்மாதோபூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[4]
கோட்டா – லால்சோத் நெடுஞ்சாலை எண் 116, சவாய் மாதோபூர் வழியாக செல்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.