தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
சரத்குமார் (Sarathkumar, பிறப்பு : சூலை 14, 1954[1]) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் .முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வந்தார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.[சான்று தேவை] இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.[சான்று தேவை]
இரா. சரத்குமார் | |
---|---|
இயற் பெயர் | சரத்குமார் இராமநாதன் |
பிறப்பு | சூலை 14, 1954[1] புது தில்லி, தில்லி, இந்தியா |
வேறு பெயர் | புரட்சி திலகம் , சுப்ரீம் ஸ்டார் |
தொழில் | திரைப்பட நடிகர், அரசியல்வாதி |
நடிப்புக் காலம் | 1988—நடப்பு |
துணைவர் | சாயா (திருமணம் 1984- 2000 மணமுறிவு) ராதிகா சரத்குமார் (2001-நடப்பு) |
குறிப்பிடத்தக்க படங்கள் | சூரிய வம்சம் |
எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் குடும்பத்தை சேர்ந்தவர்.
கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார்.
சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் - சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது.[2][3][4][5][6][7]
சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்.[8]
கோடீஸ்வரன் என்ற தொலைக்காட்சிப் பொது அறிவுப் போட்டியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.