![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Sabinaite-Analcime-Siderite-179414.jpg/640px-Sabinaite-Analcime-Siderite-179414.jpg&w=640&q=50)
சபினைட்டு
கார்பனேட்டு கனிமம் / From Wikipedia, the free encyclopedia
சபினைட்டு (Sabinaite) என்பது ஓர் அரிய கார்பனேட்டு வகை கனிமமாகும். Zr2TiO4(CO3)4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிகத் திட்டத்தில் சபினைட்டு படிகமாகிறது. துவாரங்களுக்குள் நிறமற்றது முதல் வெள்ளைப் பட்டகம் வரையிலான நிறத்தில் சபினைட்டு படிகமாகிறது. பொதுவாக தூள் பூச்சுகளாகவும் திரள்களாகவும் காணப்படுகிறது. 3.36 என்ற ஒப்படர்த்தியை கொண்டுள்ளது.[1] பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் சபினைட்டை Sba என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. [2]
சபினைட்டு Sabinaite | |
---|---|
![]() சபினைட்டு படிகங்கள் | |
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Na4Zr2TiO4(CO3)4 |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது முத; வெண்மை வரை |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
மிளிர்வு | பளபளப்பானது |
கனடாவின் கியூபெக் மாகணத்திலுள்ள மாண்ட்ரியல் தீவில் பாறை இடுக்குகளில் உள்ள கார்பனலைட்டு தகட்டுப் பாறைகளிலும் செயிண்ட் இலேர் மலையின் களிமப் பாறைகளில் ஊடுருவியும் சபினைட்டு காணப்படுகிறது.
முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு கனடாவின் மாண்ட்ரியல் தீவில் உள்ள கற்சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. 1930-2015 ஆம் ஆண்டுகள் காலத்தில் கனடாவின் புவியியல் ஆய்வில் பணிபுரிந்த கனிமவியலாளர் ஆன் சபீனா நினைவாக கனிமத்திற்கு சபினைட்டு என பெயரிடப்பட்டது.