கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
இந்தியாவின் 15-வதும் மற்றும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம். / From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (IATA: CJB, ICAO: VOCB) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம். இது முன்பு பீளமேடு விமான நிலையம் அல்லது கோயம்புத்தூர் குடிசார் விமான நிலையம் என அழைக்கப்பட்டது. இந்த வானூர்தி நிலையமானது நகரின் மையப்பகுதியிலிருந்து ஏறத்தாழ 10 km (6.2 mi) தொலைவில் பீளமேட்டில் அமைந்துள்ளது. இது பயணியர் மற்றும் வானூர்தி போக்குவரத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையத்திலிருந்து ஒன்பது உள்நாட்டு மற்றும் இரண்டு சர்வதேச நகரங்களுக்கு நேரடி வானூர்தி சேவை உள்ளது.
விரைவான உண்மைகள் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | கோயம்புத்தூர் | ||||||||||
அமைவிடம் | பீளமேடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா | ||||||||||
நேர வலயம் | IST (+5:30) | ||||||||||
உயரம் AMSL | 400 m / 1,311[1] ft | ||||||||||
ஆள்கூறுகள் | 11°01′48″N 077°02′36″E | ||||||||||
இணையத்தளம் | கோயம்புத்தூர் வானூர்தி நிலையம் | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 - மார்ச் 2019) | |||||||||||
| |||||||||||
மூடு