From Wikipedia, the free encyclopedia
கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை (Colombo Stock Exchange) (CSE) அல்லது கொழும்புப் பங்குச் சந்தை (Colombo Share Market) எனப்படுவது இலங்கையில் பங்குப் பரிவர்த்தனைக்கென அமைந்துள்ள ஒரே ஒரு சந்தையாகும்.இது கொழும்பில் இலங்கை வங்கி தலைமைப்பணியகதிற்கருகில் உள்ள உலகவர்த்தகமையத்தின் 4 வது மாடியில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் உள்ளது.பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத கம்பெனிகளின் பங்குகள்,முன்னுரிமை பங்கு, தனிச்சங்கள், திறைசேரி முறி, திறைசேரி உண்டியல், அரசபிணைகள், நிதியங்கள் என்பனவற்றின் ஆரம்ப வழங்கல், கொள்வனவு, விற்பனை பிரதானமாக இடம்பெறுகின்றது.
வகை | பங்குச் சந்தை |
---|---|
நிறுவுகை | 1985 |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
இணையத்தளம் | www.cse.lk |
கொழும்புப் பங்குச் சந்தையில் 5 வகையான தரப்பினர் பங்கு வகிக்கின்றனர்:
இலங்கையில் பங்குச் சந்தை 1896 ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.ஆங்கிலேய தோட்டக் கம்பெனிகளின் நிதியீட்ட தேவைக்காகத் தோற்றுவிக்கப்பட்ட அப்பங்குச் சந்தை ஒர் மூடிய அமைப்பாகக் காணப்பட்டது.1984 ஆண்டில் பங்குச் சந்தை பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டதுடன் திறந்த கத்தல் முறை(open out cry) அறிமுகப்படுத்தப்பட்டது.1990 ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் எனப் பெயர்மாற்றம் பெற்றது. இதில் உரிமம் பெற்ற 15 பங்குத்தரகு நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இது தவிர பங்குச் சந்தை நடப்புகளை முறைப்படுத்த இலங்கை பிணைகள் பரிமாற்று ஆணைக்குழு அமைக்கப்பட்டும் உள்ளது.1991 நடவடிக்கைகளை விரைவுபடுத்து முறையான மத்திய வைப்பு முறை (Central Depository System) அறிமுகப்படுத்தப்பட்டது.1995 ம் ஆண்டில் உலக வர்த்தக நிலையத்திற்கு இடத்தினை மாற்றிக்கொண்டது. 1999 இல் மிலங்க சுட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் மாத்தறையில் கிளை அமைக்கப்பட்டது. 2003 இல் கண்டியில் கிளை அமைக்கப்பட்டது.2004 ல் Total Return Index குறிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. 2010 இல் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் தகமையினை பெறுவதற்கு பொதுக்கம்பனிகள் பலவித சட்ட,மூலதனவரையறை தேவைப்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்,அவைகளில் முக்கியவை சில:
இவைதவிர இலங்கையில் நடைமுறையில் உள்ள 1982ம் ஆண்டு 17 ம் இலக்க கம்பனிச்சட்டம்,1987ம் ஆண்டு 36ம் இலக்க பிணைகள் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளை ஒழுகி அமைந்திருத்தல் வேண்டும்.
2006 கால முடிவில் கொழும்புப் பங்குச் சந்தையில் 16 பிரதான துறைகளின் கீழ் 241 கம்பனிகள் பட்டியலிடப்படும் தகமைகளை பெற்றுள்ளது.
கொழும்புப் பங்கு பரிவர்த்தனையின் போக்கினை,நிலையினை அறிவதற்கு பல பங்கு சுட்டிகள் பயன்படுத்தப்படுகின்றது.இவற்றில் முக்கிய சில:
கொழும்பு பஙகு சந்தையில் பயன்படுத்தப்படும் மிக பிரபல்யமான சுட்டியாகும்.இது நாளாந்தம் கணிப்பிடப்பட்டு நாள் முடிவில் அறிவிக்கப்படும்.அன்றைய தினத்தில் கைமாறப்பட்ட அனைத்துப் பங்குகளின் விலைகளும் உள்ளடக்கப்பட்டு 1985 ம் ஆண்டை அடியாண்டாகக் கொண்டு ஒப்பிடப்பட்டு கணிக்கப்படும்.இதன் அடிப்பருவம் 100 ஆகும்.
கொழும்புப் பங்குச் சந்தையில் பயன்படுத்தப்படும் மற்றுமோர் பிரபல்யமான சுட்டி இதுவாகும்.மில(விலை) அங்க(எண்) எனும் சிங்களம் சொற்களை புணர்த்தி இப்பெயர் சுட்டிக்கு வைக்க்ப்பட்டுள்து.1999 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இச் சுட்டி சந்தையிலே அதிக விசாலமான மூலதனத்தினைக் கொண்ட கம்பனிகளின் விலைமட்டங்களை அறிய பயன்படுத்தப்படுகின்றது.இதன் அடிப்பருவ சுட்டி 1000 ஆகும்.
2005 நடுவாண்டின் தரவுகளின் படி கொழும்பு பரிவர்த்தனை 497 பில்லியன் அளவான மூலதன சந்தையினைக் கொண்டுள்ளது.
பொதுவிடுமுறை நாட்கள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 9.30 தொடங்கி பிற்பகல் 2.30 வரை வியாபார நடவடிக்கைகள் இங்கு இடம்பெறும்.
கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு 3 முறைமைகள கையாள்கின்றது.அவையாவன:
மத்திய வைப்புமுறை 1991 இலும்,Automated Trading System(ATS) 1997 இலும் நிறுவப்பட்டது.கணனி மையப்படுத்தப்பட்ட,தன்னியக்கமுறையில் பங்குசந்தை நடவடிக்கைகள இடம்பெற்று வருகின்றது.
1998 அக்டோபரில் World Federation of Exchanges இல அங்கத்துவத்தினை பெற்று 52 வது உறுப்பினராக இணைந்து கொண்டது.இது தவிர இவ் அமைப்பில் இணைந்து கொண்ட தெற்காசிய வட்டச் சேர்ந்த முதலாவது பங்குச் சந்தை கொழும்புப் பங்கு பரிவர்த்தனை ஆகும்
தெற்காசிய நாடுகளின் பங்கு பரிவர்தனையில் கொழும்புப் பங்கு பரிவர்த்தனை முக்கிய அங்கம் வகிக்கின்றது.
கொழும்புப் பங்கு பரிவர்த்தனை வளர்ந்துவரும் ஒர் சந்தையாக பொருளியலாளர்களால் கணிக்கப்படுகின்றது.1979 ம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஆளும் அரசுகளால் கடைப்பிடித்துவரும் திறந்த பொருளாதார கொள்கை,தனியார்மயமாக்கல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் தன்மை,வரி நடைமுறையின் கடினத் தன்மை குறைக்கப்பட்டமை, என்பன அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.எனினும் நூறு வருடகால பாரம்பரியத்தை கொண்டுள்ள இப்பங்குச் சந்தை ஒர் திறமையற்ற சந்தையாகவும் நோக்கப்படுகின்றது.உலக சந்தையில் ஏற்படும் சரிவுகள்,ஏற்றங்கள் எந்தவொரு பாதிப்பை ஏற்படுத்தாத தன்மை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.இது தவிர கெடுபிடியான உள்நாட்டு போர்,பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை குறைவு,வட்டிவீததில் ஏற்படும் தளர்ச்சி,பங்குச் சந்தை நடைமுறை பற்றிய மக்களின் அறிவின்மை,கொழும்பை மையபடுத்திய தனமை,சந்தையில் விடப்படாமல் குடும்பத்தினர்களுக்குள்ளே பங்கு கைக் கொள்ளப்பட்டிருப்பது என்பன வேறு காரணங்களாகும்.
2001 ஆண்டில் உள்நாட்டு பிரச்சனை தொடர்பில் போர்நிறுத்த புரிந்துண்ர்வு ஒப்பந்ததின் பின் கொழும்புப் பங்கு பரிவர்த்தனையின் பெரும் வளர்ச்சி பெற்றது. 2001 ல் 500 ஆகக் காணப்பட்ட எல்லா பங்குகளுக்குமான விலைச்சுட்டி 2007 பெப்ரவரி 13 ல் 3000 னை கடந்தது முக்கிய மைல்கல்லாகும். இங்கு நாளாந்தம் சராசரியாக 776.8 மில்லியன் விற்பனை புரள்வு இடம்பெறுகின்றது.[1] விடுதலைப்புலிகளால் கொழும்பில் தாக்குதல் மேற்கொள்ளும் சந்தர்ப்பததில் பங்குச் சந்தையின் நடவடிக்கையில் சரிவு காண்பது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.