![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b8/Chennai_area_locator_map.svg/langta-640px-Chennai_area_locator_map.svg.png&w=640&q=50)
கொரட்டூர்
From Wikipedia, the free encyclopedia
கொரட்டூர் ஊராட்சி உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
கொரட்டூர் (Korattur) (13 06' 48.95N, 80 11'32.87E) இந்தியாவின் சென்னைக்கு வடமேற்கில் அமைந்த புறநகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் வட்டத்தில் உள்ள அம்பத்தூர் நகராட்சியைச் சேர்ந்தது கொரட்டூர். இப்பகுதி சென்னை - மும்பை செல்லும் இருப்புப் பாதையில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.[1] இருபதாம் நூற்றாண்டில் கிராமமொன்றாக இருந்த இப்பகுதி இன்று பரபரப்பான நகர்ப்பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள பல ஏரிகள் தூர்ந்து அங்கு கட்டிடங்கள் கட்டப்படுவதால் மழைக்காலங்களில் வடிகாலின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.[2][3]
விரைவான உண்மைகள்
கொரட்டூர் | |||
அமைவிடம் | 13°06′49″N 80°11′33″E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ் நாடு | ||
மாவட்டம் | சென்னை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
Civic agency | அம்பத்தூர் நகராட்சி | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மூடு
இங்குள்ள குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:
- பக்தவத்சலம் வித்யாசுரமம் பள்ளி (BVS)
- பக்தவத்சலம் பெண்கள் கல்லூரி
- நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா
- எபனேசர் மெட்ரிகுலேசன் இடைநிலைப் பள்ளி - மிகத் தொன்மையானது