From Wikipedia, the free encyclopedia
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Cochin University of Science and Technology, CUSAT) 1971 இல் கொச்சி, கேரளம், இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சிப் பலகலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் பொறியியல், அறிவியற் சார்ந்த இணைப்படிப்புகளில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்கிவருகிறது. இப்பல்கலைக்கழகம் மொத்தம் மூன்று வளாகங்களை உள்ளடக்கியது: அதில் இரண்டு கொச்சியிலும் மற்றொன்று குட்டநாடு, ஆலப்புழாவிலும் (66 கிமீ. தாண்டி) உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இரண்டாயிரம் மாணவர்களுக்கும் மேல் இளநிலை முதுநிலைப் பட்டங்களில் பயின்றும் வருகின்றனர்.
കൊച്ചിന് യൂനിവേഴ്സിറ്റി ഓഫ് സയന്സ് ആന്റ് ടെക്നോളജി | |
குறிக்கோளுரை | "May learning illuminate us both, the teacher and the taught" |
---|---|
வகை | அரசு நிறுவனம் |
உருவாக்கம் | 1971 |
வேந்தர் | பாரூக் மரைக்காயர் |
துணை வேந்தர் | இராமச்சந்திரன் தெக்கேடத்து |
பட்ட மாணவர்கள் | 2000 (2005) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 500 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் சார் பகுதி |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) UGC |
இணையதளம் | www.cusat.ac.in |
கொச்சின் பல்கலைக்கழகம் என அறியப்பட்ட இக்கல்வி நிலையம் 1971 இல் கேரள அரசு முதுநிலைப் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக சட்டப்பூர்வமாக நிறுவியது. பிப்ரவரி 1986 இல் இது கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மாற்றியமைக்கப்பட்டது (Cochin University of Science and Technology - CUSAT). இதன் மையக் குறிக்கோளாக இளநிலை, முதுநிலை, மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, சமூக வளர்ச்சியில் மேம்பட்ட ஆய்வுகளை நோக்கியமைக்கப்பட்டது.
இதில் சேர்க்கை பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வான பொது சேர்க்கை தேர்வு (Common Admission Test - CAT) வாயிலாகவும், அல்லது துறை சார் நுழைவுத்து தேர்வு வாயிலாகவும் (Departmental Admission Tests - DAT) நடைபெறுகிறது.
கொச்சிப் பல்கலைக்கழகம் மூன்று வளாகங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
1. அறிவியற் கல்விச்சாலை (Faculty of Science)
2. தொழில்நுட்பக் கல்விச்சாலை (Faculty of Technology)
3. பொறியியற் கல்விச்சாலை (Faculty of Engineering)
4. சுற்றுச்சூழலியற் கல்விச்சாலை (Faculty of Environmental Studies)
5. மானுடவியற் கல்விச்சாலை (Faculty of Humanities)
6. சட்டப் கல்விச்சாலை (Faculty of Law)
7. கடலறிவியற் கல்விச்சாலை (Faculty of Marine Sciences)
8. மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்பக் கல்விச்சாலை (Faculty of Medical Sciences and Technology)
9. சமூக அறிவியல்கள் கல்விச்சாலை (Faculty of Social Sciences)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.