கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
கேம்பிரிச்சு பல்கலைக்கழகம் (University of Cambridge) என்பது இங்கிலாந்தில், கேம்பிரிச்சு என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.[8]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
University of Cambridge (ஆங்கில மொழி) | |
இலத்தீன்: Universitas Cantabrigiensis | |
Other name | The Chancellor, Masters and Scholars of the University of Cambridge |
---|---|
குறிக்கோளுரை | இலத்தீன்: Hinc lucem et pocula sacra |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Literal: From here, light and sacred draughts. Non literal: From this place, we gain enlightenment and precious knowledge. |
வகை | பொதுத்துறை ஆய்வு பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | அண். 1209; 815 ஆண்டுகளுக்கு முன்னர் (1209) |
நிதிக் கொடை | £7.121 பில்லியன்(கல்லூரிகள் உட்பட)[3] |
நிதிநிலை | £2.308 பில்லியன்(கல்லூரிகள் தவிர்த்து)[4] |
வேந்தர் | The Lord Sainsbury of Turville |
துணை வேந்தர் | Anthony Freeling |
கல்வி பணியாளர் | 6,170 (2020)[5] |
நிருவாகப் பணியாளர் | 3,615 (கல்லூரிகள் தவிர்த்து)[5] |
மாணவர்கள் | 24,450 (2020)[6] |
பட்ட மாணவர்கள் | 12,850 (2020) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 11,600 (2020) |
அமைவிடம் | , |
நிறங்கள் | கேம்பிரிச்சு நீலம்[7] |
Sporting affiliations | விளையாட்டு நீலம் |
இணையதளம் | cam |
31 கல்லூரிகளைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 பில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெறுகின்றது.
கேம்பிரிச்சு பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர். இது பல்வேறு கல்வி சங்கங்களில் உறுப்பினராகவும் மற்றும் ஆங்கில பல்கலைக்கழகங்களின் தங்க முக்கோணத்திலும் ஓர் அங்கம் வகிக்கிறது.