கூலும்
மின்னேற்றத்தின் சர்வதேச நியம அலகு / From Wikipedia, the free encyclopedia
கூலும் (coulomb) அல்லது கூலோம் (ஈழத்து வழக்கு) என்பது மின்மத்தை அளக்கும் அனைத்துலக அலகு (SI அலகு, ஆனால் அடிப்படை அனைத்துலக முறை அலகுகள் (SI) அலக்குகள் 7 இல் ஒன்று அல்ல). இந்த அலகின் அனைத்துலகக் குறியீடு : C. கூலும் என்பது 18 ஆம் நூற்றாண்டில் மின்னியல் துறையில் முன்னணி ஆய்வுகள் செய்த சார்லசு அகுசிட்டின் டி கூலும் (Charles-Augustin de Coulomb) என்னும் பிரான்சிய அறிவியலாளரின் நினைவாக சூட்டப்பட்ட பெயர் ஆகும்.
விரைவான உண்மைகள் கூலும், அலகு முறைமை ...
கூலும் | |
---|---|
அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | மின்மம் |
குறியீடு | C |
பெயரிடப்பட்டது | சார்லசு அகுசிட்டின் டி கூலும் |
அலகு மாற்றங்கள் | |
1 C இல் ... | ... சமன் ... |
SI அலகுகள் | 1 A s |
CGS அலகுகள் | 2997924580 statC |
அணு அலகுகள் | 6.24150965(16)×1018 e |
மூடு