ஆம்பியர்
மின்னோட்ட அலகு / From Wikipedia, the free encyclopedia
ஆம்பியர் (குறியீடு: A) [1][2] என்பது மின்னோட்டத்தின் அனைத்துலக முறை அலகுகளில் (SI) அடிப்படை அலகு ஆகும்.[3][4] மின்னோட்டம் பாயும் மின் கடத்திகளுக்கிடையே உருவாகும் மின்னியக்கு விசையை அளப்பதே ஆம்பியர் என அனைத்துலக முறை அலகுகள் விளக்குகின்றன.
ஆம்பியர் | |
---|---|
மின்னோட்டத்தை கல்வனோமானி மூலமாக அளக்க முடியும், காந்த ஊசி மின்னோட்டத்துக்கு துலங்கல் காட்டும். | |
பொது தகவல் | |
அலகு முறைமை | SI அலகு |
அலகு பயன்படும் இடம் | மின்னோட்டம் |
குறியீடு | A |
ஒரு விநாடியில் பாயும் ஒரு கூலோம் (6.241 × 1018 எதிர்மின்னிகள்) மின்மமே ஒரு ஆம்பியர் என வரைவிலக்கணப்படுத்தப்படும். (1775–1836) ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த பிரெஞ்சு இயற்பியலாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் பெயரால் இவ்வலகு அழைக்கப்படுகிறது. இவர் மின்னியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
அளவில் மாறுபடாத மின்னோட்டம் சில்வர் நைட்ரேட் கரைசலில் பாய்ந்து 0.0011180 கிராம் வெள்ளியை ஒரு நொடியில் படியச் செய்யுமானால் அது உலகப் பொது ஆம்பியர் (International ampere) எனப்படும். இதுவும் ஆம்பியருக்கான ஒரு விளக்கமாகும்.
ஓம் விதியின்படி , ஒரு மின்சுற்றில் மின்தடையானது, மின் இயக்க விசைக்கு நேர்விகித்திலும் அதில் பாயும் மின்னோட்டத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கிறது.அதாவது R = V/I க்குச் சமம்.அல்லது
- I=V/R ஆகும்.
இதிலிருந்து, ஒரு ஓம் மின் தடையினை ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் வைத்திருக்கும் போது அதில் பாயும் மன்னோட்டம் ஒரு ஆம்பியருக்குச் சமம் ஆகும்.