பிரேசிலின் மாநிலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
கூட்டரசு மாவட்டம் (Federal District, போர்த்துக்கேய மொழி: Distrito Federal; போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [dʒiʃˈtɾitu fedeˈɾaw]), ஏப்ரல் 21, 1960இல் நிறுவப்பட்ட பிரேசிலின் 27 மாநிலங்களில் ஒன்றாகும். பிரேசிலின் மேட்டுப்பகுதியில் நடுவண் பகுதியில் அமைந்துள்ள கூட்டரசு மாவட்டம் 31 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில்தான் பிரேசிலின் தலைநகரம் பிரசிலியா அமைந்துள்ளது. இங்கு கூட்டரசின் மூன்று அங்கங்களும் (சட்டவாக்க அவை, செயலாட்சியர், நீதித்துறை) இங்குள்ளன. இதன் தட்பவெப்பநிலை இரண்டே பருவங்களைக் கொண்டுள்ளது. உலர்ந்த பருவத்தில் (குளிர்காலம்), குறிப்பாக வெப்பமிகு நாட்களின் மதிய நேரங்களில் ஈரப்பதம் மிகக் குறைவான நிலைகளை எட்டக்கூடும். 40 km2 (15 sq mi) நீருடைய செயற்கையான பாரநோவா ஏரி இதற்கு தீர்வாகவே கட்டப்பட்டுள்ளது.
கூட்டரசு மாவட்டம்
டிசுடிரிட்டொ பெடரல் | |
---|---|
பிரேசிலில் கூட்டரசு மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பிரேசில் |
தலைநகரம் | பிரசிலியா |
அரசு | |
• ஆளுநர் | அக்னெலோ குய்ரோசு (தொழிலாளர் கட்சி (பிரேசில்)) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,802 km2 (2,240 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 27வது |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 26,48,532 |
• தரவரிசை | 20வது |
• அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
அடர்த்தி தரவரிசை | முதலாவது |
இனம் | பிரேசிலியன்சு |
மொ.உ.உ | |
• Year | 2006 estimate |
• Total | R$ 110,630,000,000 (8th) |
• Per capita | R$ 45,600 (1st) |
HDI | |
• Year | 2005 |
• Category | 0.911 – very high (1st) |
நேர வலயம் | ஒசநே–3 (BRT) |
• கோடை (பசேநே) | ஒசநே–2 (BRST) |
அஞ்சல் குறியீடு | 70000-000 to 73690-000 |
ஐஎசுஓ 3166 குறியீடு | BR-DF |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.