குறுக்ஸ் மொழி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
குடக்கு மொழி அல்லது குடுக்கு மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். பிராகுயி, மால்ட்டோ போன்ற பிற வட திராவிட மொழிகளுக்கு நெருக்கமான இம்மொழி, ஓராவோன் மற்றும் கிழான் இனக்குழுவினரால் பேசப்படுகிறது. இம் மொழியைப் பேசுவோர், பீகார், சார்க்கண்டு, ஒடிசா, சத்தீசுகர், மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களிலும், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும் பரந்துள்ளனர். வங்காளதேசத்தில் புழங்கும், ஒரே உள்நாட்டுத் திராவிட மொழி இதுவேயாகும். இதனைப் பேசுவோரில் குரூக் மக்கள் மற்ரும் ஓரோன் மக்கள் 1,834,000 பேரும், கிசான் இனக்குழுவினர் 219,000 பேரும் ஆவர். இது, பல வட இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகின்றது.
குறுக்ஸ் மொழி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா, வங்காளதேசம் |
பிராந்தியம் | பீஹார், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம், வங்காளதேசம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,053,000 (1997) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | kru |
ISO 639-3 | kru |
இதனைப் பேசுவோர் தொகை இரண்டு மில்லியனுக்கு மேல் இருப்பினும், இது அழியும் ஆபத்தில் உள்ள ஒரு மொழியாகக் கணிக்கப்படுகிறது.[1] தற்போது தொலங் சீக்கி[2] எழுத்துமுறை நாராயண ஒரியன் என்பவரால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.[3]
𑰀 𑰁 𑰂 𑰃 𑰄 𑰅
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.