இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
பிகார் அல்லது பீகார் (Bihar) இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.
பிகார்
बिहार | |
---|---|
பீகார் அரசு சின்னம் | |
பண்: மேரே பாரத் கே காந்த் ஹார் (என் இந்தியாவின் மாலை) | |
இந்தியாவில் பிகாரின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
நிறுவப்பட்ட நாள் | 22 மார்ச்சு 1912(பீகார் நாள்) |
மாநிலமாக்கப்படல் | 26 சனவரி 1950 |
தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் | பட்னா |
மாவட்டங்கள் | 38 |
அரசு | |
• நிர்வாகம் | பீகார் அரசு |
• ஆளுநர் | பாகு சவுகான் |
• முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
• சட்டமன்றம் | ஈரவை முறைமை சட்ட மேலவை 75 சட்டப் பேரவை 243 |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | பாட்னா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 94,163 km2 (36,357 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 13வது |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 10,38,04,637 |
• தரவரிசை | 3-ஆவது |
• அடர்த்தி | 1,102/km2 (2,850/sq mi) |
இனம் | பிகாரி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
UN/LOCODE | INBR |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR |
ம.மே.சு. | 0.447[2] (low) |
ம.மே.சு. தரவரிசை | 16-ஆவது (2010) |
படிப்பறிவு[3] | 63.8% (மொத்தம்) 73.5% (ஆண்) 53.3% (பெண்) |
அதிகாரபூர்வ மொழி | இந்தி[4] |
மேலதிக அதிகார மொழி | உருது[5] |
இணையதளம் | gov |
சின்னங்கள் | |
சின்னம் | பீகார் அரசு சின்னம் |
பாடல் | மேரே பாரத் கே காந்த் ஹார் |
விலங்கு | இந்தியக் காட்டெருது |
பறவை | சிட்டு |
மீன் | நடைகேட்ஃபிஷ் |
மலர் | மலையாத்தி |
மரம் | அரச மரம் |
2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து சார்க்கண்டு மாநிலம் உருவாக்கப்பட்டது.
பிகார் முற்காலத்தில் அதாவது பொ.ஊ.மு. 600ல் துவங்கி மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.
பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.42% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 54,278,157 ஆண்களும் மற்றும் 49,821,295 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,106 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 61.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.20% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,133,964 ஆக உள்ளது. [6]
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 23,779 (0.02 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 18,914 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 25,453 (0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,437 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 (0.24 %) ஆகவும் உள்ளது.
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தியுடன், போஜ்புரி, உருது, மைதிலி மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.[7]
கங்கை ஆறும் மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும்.
பிகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[8] மாவட்டங்கள் விவரம்;
கயை, நாலந்தா பல்கலைக்கழகம், புத்தகயா, மகாபோதி கோயில், கேசரியா, ராஜகிரகம் மற்றும் வைசாலி ஆகும்.
கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் இருப்புப்பாதைகள் அனைத்தும் பட்னா சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.[9]
பாட்னாவில் உள்ள லோகநாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பன்னாட்டு விமான நிலையம் [10] இந்தியாவின் நகரங்களுடனும் மற்றும் பன்னாட்டு நகரங்களுடனும் இணைக்கிறது.[11]
புதுதில்லி - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2 பாட்னா வழியாக செல்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.