![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Kurdish-inhabited_area_by_CIA_%25281992%2529.jpg/640px-Kurdish-inhabited_area_by_CIA_%25281992%2529.jpg&w=640&q=50)
குர்திசுத்தான்
From Wikipedia, the free encyclopedia
குர்திஸ்தான் (குர்தி மொழி: كوردستان) என்பது குருது மக்களின் மரபுவழித் தாயகத்தைக் குறிக்கும். இந்த நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, ஆர்மேனியா ஆகிய நாடுகளின் பகுதிகளில் இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு குர்திஸ்தான் உருவாக்கப்படவேண்டும் என்பது குர்து மக்களின் வேண்டுகோள் ஆகும்.
விரைவான உண்மைகள் மொழி, இடம் ...
![]() Kurdish-inhabited areas. | |
மொழி | குர்தி மொழி |
---|---|
இடம் | ஈரான், ஈராக், சிரியா, துருக்கி [1] |
பரப்பு (Est.) | 190,000 km²–390,000 km² 74,000 sq.mi–151,000 sq.mi |
மக்கட்தொகை | 25 to 30 Million (Est.)[2] |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Flag_of_Kurdistan.svg/640px-Flag_of_Kurdistan.svg.png)
இன்றைய குர்திஸ்தான் குர்து மக்கள் அதிகம் வாழும் துருக்கியின் கிழக்கு (துருக்கிய குர்திஸ்தான்), ஈராக்கின் வடக்கு (ஈராக்கிய குர்திஸ்தான்), ஈரானின் வடமேற்கு (ஈரானிய குர்திஸ்தான்) , மற்றும் சிரியாவின் வடக்கு ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது.[3]