குர்து மக்கள் வாழும், ஈரானின் வடமேற்கு பகுதியை குறிப்பிடப்படும் அதிகாரப்பூர்வமற்ற பெயர் From Wikipedia, the free encyclopedia
ஈரானிய குர்திஸ்தான் அல்லது கிழக்கு குர்திஸ்தான் ( குர்திஷ் : Rojhilatê Kurdistanê , ڕۆژھەڵاتی کوردستان ), என்பது ஈராக்கு மற்றும் துருக்கியின் எல்லைப் பகுதியில் குர்துகள் வசிக்கும் வடமேற்கு ஈரானின் சில பகுதிகளைக் குறிப்படப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வமற்ற பெயர் ஆகும். இதில் மேற்கு அசர்பைசான் மாகாணம், [குறிப்பு 1] குர்திஸ்தான் மாகாணம் மற்றும் கெர்மான்ஷா மாகாணம் [1][2] ஆகியவை அடங்கும்.
குர்துகள் பொதுவாக வடமேற்கு ஈரானை அகண்ட குர்திஸ்தானின் நான்கு பகுதிகளில் ஒன்றாக கருதுகின்றனர். இந்த அகண்ட குர்திஸ்தானில் தென்கிழக்கு துருக்கி ( வடக்கு குர்திஸ்தான் ), வடக்கு சிரியா ( மேற்கு குர்திஸ்தான் ) மற்றும் வடக்கு ஈராக் ( தெற்கு குர்திஸ்தான் ) ஆகிய பகுதிகளும் அடங்கும்.[3]
கடைசியாக 2006 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஈரானில் குர்து மக்கள் வசிக்கும் நான்கு மாகாணங்களான - மேற்கு அஜர்பைஜான், கெர்மன்ஷா மாகாணம், குர்திஸ்தான் மாகாணம் மற்றும் இலம் மாகாணம் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகை 6,730,000 ஆகும்.[4] இலம் மாகாணத்தின் தெற்குப் பகுதிகளில் லர்ஸின் இடைப்பள்ளத்தில் வாழ்கின்றனர்.
ஈரானிய குர்துகள் ஈரானின் மொத்த மக்கள் தொகையில் 7-10% ஆவர்.[5][6][7][8][9] ஈரானிய குர்துகளில் பெரும்பான்மையானவர்கள் சியா இசுலாமியர்கள் என்று ஒரு பக்க சான்றுகள் குறிப்பிடுகின்றன,[10][11][12] மற்றொரு பக்கம் ஈரானிய குர்துகள் பெரும்பாலும் சுன்னி இசுலாமியர்கள் என்றும் குறிப்பிடுகின்றன.[13] ஷியா குர்துகள் ஃபெய்லி என்று அழைக்கப்படுகிறார்கள். குர்து ஜாஃப் பழங்குடியினர் இலம் மாகாணம் மற்றும் குர்திஸ்தான் மற்றும் ஹமதன் மாகாணங்களின் சில பகுதிகளிலும் இதைத் தவிர, அவர்கள் கெர்மன்ஷா மற்றும் கெனேகினைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். வடகிழக்கு ஈரானில் உள்ள கோரசன் மாகாணத்தின் குர்துகளும் ஷியா இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள். ஈரானியப் புரட்சியின் போது, முக்கிய குர்திஷ் அரசியல் கட்சிகள் ஷியா குர்துகளை உள்வாங்குவதில் தோல்வியுற்றன, அந்தக் காலத்தில் சுயாட்சி கோரிக்கையில் அக்கறை இருக்கவில்லை. எவ்வாறாயினும், 1990 களில் இருந்து குர்திஷ் தேசிய உணர்வு ஷியா குர்திஷ் பகுதியின் ஒரு குறிப்பிட்ட அளவு மக்களிடம் நுழைந்துள்ளது. இதற்கு காரணங்களில் ஒன்றாக வடக்கே குர்துகளை வன்முறையில் மூலமாக அடக்கும் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த சீற்றம் காரணமாக அமைந்தது.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை, இரண்டு குர்திஷ் வம்சங்கள் இந்த பிராந்தியத்தை ஆண்டன. அவை ஹசன்வேஹிட்ஸ் (959-1015) மற்றும் அயாரிட்ஸ் (990–1117) (கெர்மன்சா, தினாவார், இலம் மற்றும் கானாகின் ஆகிய பகுதிகளில்) ஆகியவை ஆகும். 1174 முதல் 1254 முடிய லெவண்ட் பகுதியை குர்து இன அய்யூப்பிய வம்சத்தின் சலாகுத்தீன் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் 80 ஆண்டுகள் லெவண்ட் பிரதேசத்தை ஆண்டனர்.[14] 14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட அர்தலான் அரசு, சர்தியாவா (கரடாக்), கானாகின், கிர்குக், கிஃப்ரி மற்றும் ஹவ்ராமன் ஆகிய பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. ஷராசூரில் அரசின் தலைநகரம் இன்றைய ஈராக்கிய குர்திஸ்தானின் ஷராசூரில் முதன்முதலில் இருந்தது, ஆனால் பின்னர் சின்னேவுக்கு (சனந்தாஜ்) (இன்றைய ஈரான்) மாற்றப்பட்டது. கஜார் மன்னர் நாசர்-அல்-தின் ஷாவின் (1848-1896) ஆட்சி 1867 இல் முடியும் வரை அர்தலன் வம்சம் இப்பகுதியை தொடர்ந்து ஆட்சி செய்தது.
குர்திஸ்தான் தளையற்ற வாழ்க்கை கட்சி அல்லது பி.ஜே.கே. அமைப்பு குறித்து 2009 பிப்ரவரி 4 அன்று அமெரிக்காவின் பயங்கரவாத மற்றும் நிதி புலனாய்வுக்கான கருவூல துணை செயலாளர் ஸ்டூவர்ட் லெவி குறிப்பிடும்போது, "இன்றைய நடவடிக்கையுடன், குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி உடனான பிஜேக்கின் (குர்திஸ்தானின் தளையற்ற வாழ்க்கை கட்சி) பயங்கரவாத உறவுகளை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம், மேலும் துருக்கி தன் குடிமக்களை இவர்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க அதன் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம்." என்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.