கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 30,181 சதுர அடி (2,803.9 சதுர மீட்டர்) பரப்பளவுடையது.[1] மேலும் 1300 ஆண்டுகள் பழமையானது.[2] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.[3]
விரைவான உண்மைகள் ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், ஆள்கூறுகள்: ...
ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°57′30″N 79°22′16″E |
பெயர் | |
பெயர்: | ஆதி கும்பேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவு: | கும்பகோணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆதிகும்பேசுவரர் (சிவன்) |
தாயார்: | மங்களாம்பிகை (பார்வதி) |
தீர்த்தம்: | மகாமகம் குளம், காவிரி தீர்த்தம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | 1000-2000 ஆண்டுகள் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
மூடு