கு. பிச்சாண்டி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கு.பிச்சாண்டி (K. Pitchandi) ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் மற்றும் சட்டப்பேரவையின் துணைத்தலைவரும் ஆவார். இவர் 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]. 1996 முதல் 2001 வரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]
விரைவான உண்மைகள் கு.பிச்சாண்டி, அமைச்சர் ...
கு.பிச்சாண்டி | |
---|---|
அமைச்சர் | |
பதவியில் 1996-2001 | |
சமஉ | |
பதவியில் 1996 - 2011 | |
தொகுதி | திருவண்ணாமலை |
சமஉ | |
பதவியில் 1989 - 1991 | |
தொகுதி | திருவண்ணாமலை |
மூடு