கிச்சிலி
From Wikipedia, the free encyclopedia
கிச்சிலி (Citrus) என்பது உரூடேசி குடும்ப பூக்கும் மரங்கள், குறுமரங்களடங்கிய உருடேசியே பேரினமாகும். இப்பேரினத்திலுள்ள தாவரங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தை,பம்பளிமாசு (பப்ளிமாசு) உள்ளிட்ட முக்கிய பயிர்கள் புளிப்புச் சுவையுள்ள சிட்ரசு பழங்களை உருவாக்குகின்றன.
கிச்சிலி | |
---|---|
தோடம்பழம் (Citrus × sinensis பயிரிடும்வகை) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | பிளான்டேதாவரம் |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Sapindales |
குடும்பம்: | Rutaceae |
துணைக்குடும்பம்: | Aurantioideae |
சிற்றினம்: | சிட்ரே Citreae |
பேரினம்: | சிட்ரசுCitrus |
சிற்றினம் மற்றும் கலப்பினம் | |
முக்கியச் சிற்றினங்கள்: முக்கியக் கலப்பினங்கள்: |
அண்மைய ஆராய்ச்சி முடிவுகளின்படி சிட்ரசு தாவரங்களின் தாயகம் ஆத்திரேலியா, நியூ கலிடோனியா, நியூ கினியா ஆகும்.[1]. இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளின்படி இதன் தாயகம் தென்கிழக்கு ஆசிய எல்லைகளான வடகிழக்கு இந்தியா, பர்மா (மியான்மார்), சீனாவின் யுன்னான் மாகாணம் ஆகியவையஆகும். [2][3][4].சில குறிப்பிட்ட வணிகவகை இனங்களான ஆரஞ்சு, மெண்டரின் தோடம்பழம் (mandarine Orange), எலுமிச்சை இப்பகுதியில் தோன்றியதாகும். பழங்காலத்திலிருந்தே சிட்ரசு பழங்கள் பரவலாக விளைவிக்கப்பட்டு வருகின்றன.