![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Portrait_Gandhi.jpg/640px-Portrait_Gandhi.jpg&w=640&q=50)
காந்தி ஜெயந்தி
மகாத்மா காந்தியின் பிறப்பைக் குறிக்கும் வகையில் இந்தியாவில் கொண்டாடப்படும் தேசிய விடுமுறை / From Wikipedia, the free encyclopedia
காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அனுசரிக்கப்பட்டு) வருகிறது.[1]
விரைவான உண்மைகள் காந்தி ஜெயந்தி, கடைபிடிப்போர் ...
காந்தி ஜெயந்தி | |
---|---|
![]() | |
கடைபிடிப்போர் | இந்தியா |
முக்கியத்துவம் | இந்திய விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தியின் பிறந்த நாள் |
அனுசரிப்புகள் | வரலாற்று கொண்டாட்டங்கள் |
நாள் | 2 அக்டோபர் |
நிகழ்வு | ஆண்டுக்கு ஒருமுறை |
தொடர்புடையன | அனைத்துலக வன்முறையற்ற நாள் குடியரசு நாள் இந்தியாவின் விடுதலை நாள் |
மூடு