From Wikipedia, the free encyclopedia
கல்லறை எச் கலாச்சாரம் (Cemetery H culture) தற்கால இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகளில் கி மு 1900 முதல் கி மு 1300 வரை செழித்திருந்த வெண்கல காலத்தை சேர்ந்த கலாச்சாரம் ஆகும். [1] கல்லறை எச் கலாச்சாரம், சிந்துவெளி, ஹரப்பா மற்றும் ஆரியக் குடியேற்றங்களுக்கு பிந்தியதாகும்.
அரப்பாவில் எச் என்று குறித்த பகுதியில் கி மு 1900 – 1300க்கு இடைப்பட்ட காலத்திய கல்லறைகளை அகழ்வாராய்ச்சி செய்த போது அறியப்பட்டதால் இதற்கு கல்லறை எச் கலாச்சாரம் பெயராயிற்று.
எச் கல்லறைகளை அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த மட்பாண்டங்களில் சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் கலைமான், மயில் போன்ற விலங்குகள் செந்நிற வர்ணத்தால் தீட்டப்பட்டிருந்தது. மேலும் கல்லறைகளில் கிடைத்த அணிகலன்கள், தானியங்களை ஆய்வு செய்த போது, அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் அறியப்பட்டது. எச் கல்லறை கலாச்சாரப் பகுதிகளில் நெல் முக்கிய பயிராகும். களிமண்னால் ஆன செங்கல்கள் பயன்படுத்தப்பட்டது. இறந்தவர்களின் சடலங்கள் மரப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. [2]
Seamless Wikipedia browsing. On steroids.