கர்தினால்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை கத்தோலிக்க உயர்நிலை அதிகாரி பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, கர்தினால் பறவை என்பதைப் பாருங்கள்.
கர்தினால் (Cardinal) என்னும் பெயர் கத்தோலிக்க திருச்சபையில் உயர்நிலையிலுள்ள ஒரு வகை அதிகாரிகளைக் குறிக்கிறது. கர்தினால் பதவியிலுள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் "கர்தினால் குழு" (College of Cardinals) என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் திருச்சபையின் இளவரசர்கள் என்று கூறுவதும் உண்டு.[1]