கரக் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கரக் மாவட்டம்map

கரக் மாவட்டம் (Karak District) (பஷ்தூ: کرک ولسوالۍ, உருது: ضِلع کرکpronounce) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள பக்துன்வா மாகாணத்தின் தென்மத்திய பகுதியில் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தெற்கில் கோஹாட் மாவட்டம், வடக்கில் பன்னு மாவட்டம் மற்றும் லக்கி மார்வாத் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகரம் பெசாவரிலிருந்து 123 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது.

விரைவான உண்மைகள் கரக் மாவட்டம், கைபர் பக்துன்வா, நாடு ...
கரக் மாவட்டம், கைபர் பக்துன்வா
மாவட்டம்
Thumb
பகதூர் கேல் உப்புக் குன்று
Thumb
பாக்கிஸ்தானின் பக்துன்வா மாகாண வரைபடத்தில் கரக் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறம்)
ஆள்கூறுகள்: 33°08′N 71°05′E
நாடுபாகிஸ்தான்
மாகாணம்பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டுசூலை 1982
தலைமையிடம்கரக் நகரம்
அரசு
  மாவட்ட நசீமஒமர் தராஸ்
  மாவட்ட துணை நசீம்சஜ்ஜத் பராக்
பரப்பளவு
  மொத்தம்3,372 km2 (1,302 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
  மொத்தம்7,06,299
  அடர்த்தி210/km2 (540/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் நேரம்)
தாலுகாக்கள்3
மூடு

3372 சகிமீ பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின், 2017-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள்தொகை 7,06,299 ஆகும்.[2] இம்மாவட்ட மக்களில் 99.7% பஷ்தூ மொழி பேசுகின்றனர். உருது மற்றும் ஆங்கிலம் சிறிதளவில் பேசப்படுகிறது.[3]:24 இம்மாவட்டத்தில் இந்துப்பு குன்றுகள் அதிகம் உள்ளது.

வருவாய் வட்டங்கள்

  • பண்டாஅ தௌத் ஷா வட்டம்
  • கரக் வட்டம்
  • தக்த் -இ- நஸ்ரதி வட்டம்

கிருஷ்ணன் கோயில்

இம்மாவட்டத்தில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயில் டிசம்பர் 2020-இல் அடிப்படைவாத இசுலாமியர்களால் இடித்து, தீவைக்கப்பட்டது.[4]இக்கோயிலை மீண்டும் இரண்டு வாரத்திற்குள் பாகிஸ்தான் அரசு கட்டித் தரவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. [5]மலேசியாவில் உள்ள இந்திய இசுலாமிய மதபோதகரான சாகிர் நாயக், பாகிஸ்தான் போன்ற இசுலாமிய நாடுகளில் பிற சமயத்தினர் கோயில் இருப்பதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். [6]

மாவட்ட நிர்வாகம்

வருவாய் வட்டங்கள்

  • பண்டா தௌத் ஷா வட்டம்
  • கரக் வட்டம்
  • தக்த் -இ- நஸ்ரதி வட்டம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.