பன்னு மாவட்டம்
பாகிஸ்தானின், கைபர் பக்துன்வா மாகாணத்தின், மாவட்டம். From Wikipedia, the free encyclopedia
பாகிஸ்தானின், கைபர் பக்துன்வா மாகாணத்தின், மாவட்டம். From Wikipedia, the free encyclopedia
பன்னு மாவட்டம் (Bannu District) (பஷ்தூ: بنو ولسوالۍ, உருது: ضِلع بنوں) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் பன்னு நகரம் ஆகும். இம்மாவட்டம் 1861-இல் பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாவட்டமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2]: 3 முன்னர் இம்மாவட்டம் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதியில் இருந்தது. 2018-இல் நடுவண் நிர்வாகத்தில் இருந்த பழங்குடிப் பகுதிகள் கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
பன்னு மாவட்டம்
ضلع بنوں | |
---|---|
மாவட்டம் | |
நாடு | Pakistan |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
நிறுவிய ஆண்டு | 2018 |
தலைமையிடம் | பன்னு நகரம் |
பரப்பளவு | |
• மாவட்டம் | 1,227 km2 (474 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மாவட்டம் | 11,67,892 |
• அடர்த்தி | 950/km2 (2,500/sq mi) |
• நகர்ப்புறம் | 49,965 |
• நாட்டுப்புறம் | 11,17,927 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
வருவாய் வட்டங்கள் | 4 |
பன்னு மாவட்டத்தின் எல்லைகளாக வடமேற்கில் வடக்கு வசீரிஸ்தான், வடகிழக்கில் கரக் மாவட்டம், தென்கிழக்கில் லக்கி மார்வாத் மாவட்டம், தென்மேற்கில் தெற்கு வசீரிஸ்தான் உள்ளது. கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றத்தில், பன்னு மாவட்டத்தின் சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.[3] பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்யப்படுகிறார்.[4]
பன்னு மாவட்டத்தின் முக்கியத் தொழில்களாக துணி நெய்தல், சர்க்கரை ஆலைகள், பஞ்சு நூல் ஆலைகள் உள்ளது. குர்ரம் மற்றும் காம்பிலா ஆறுகள பன்னு மாவட்டத்தை வளப்படுத்துகிறது. [5]:392
பன்னு மாவட்டம் 4 வருவாய் வட்டங்களும், 49 ஒன்றியக் குழுக்களும் கொண்டது[6][7]
2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1227 சகிமீ பரப்பளவு கொண்ட பன்னு மாவட்டத்தின் மக்கள்தொகை 11,67,892 ஆகும். பன்னு மாவட்ட மக்களில் 99.3% பஷ்தூ மொழி பேசுகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.