கயை வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கயை வானூர்தி நிலையம் (Gaya Airport) அல்லது புத்தகயை வானூர்தி நிலையம், (Bodhgaya Airport, (ஐஏடிஏ: GAY, ஐசிஏஓ: VEGY) இந்தியாவில் பீகார் மாநிலத்தில் கயை நகரில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது கயை நகரிலிருந்து தென்மேற்கே 12 கிமீ தொலைவிலும் கோவில் நகரான புத்தகயாவிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. புத்தகயாவில் தான் புத்தருக்கு ஞானோதயம் உண்டானது. இந்த வானூர்தி நிலையம் பீகாரில் உள்ள இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்; முதலாவது மாநிலத் தலைநகர் பட்னாவிலுள்ள செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். தாய்லாந்து, மியான்மர், பூட்டான், இலங்கை போன்ற பௌத்தர்கள் மிகுந்துள்ள நாடுகளுக்கு இந்த வானூர்தி நிலையத்திலிருந்து நிரந்தரமாக சமயச் சுற்றுலாப் பறப்புகள் இயக்கப்படுகின்றன. பௌத்தர்களுக்கு இதுவே உலகின் மிகவும் புனிதமானத் தலமாகும். ஏர் இந்தியா மட்டுமே இந்த வானூர்தி நிலையத்திலிருந்து இயங்குகின்றது.
கயை வானூர்தி நிலையம் புத்தகயை வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | கயை | ||||||||||
அமைவிடம் | கயை | ||||||||||
உயரம் AMSL | 116 m / 380 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 24°44′40″N 084°57′04″E | ||||||||||
இணையத்தளம் | கயை வானூர்தி நிலையம் | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2014-15) | |||||||||||
| |||||||||||