From Wikipedia, the free encyclopedia
கயபுசா2 (Hayabusa2 (はやぶさ2? "பொரி வல்லூறு 2")) என்பது சப்பானின் விண்வெளி ஆய்வு முகமையினால் சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்து வர ஏவப்பட்ட ஒரு விண்கலத் திட்டமாகும். இது முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டு 2010 சூனில் மீண்ட ஹயபுசா திட்டத்தின் இரண்டாவது படியும், அதன் மேம்படுத்தப்பட்ட திட்டமுமாகும்.[8]
ஓவியரின் கைவண்ணத்தில் கயபுசா2 | |
திட்ட வகை | சிறுகோள் மாதிரி சேகரித்தல் |
---|---|
இயக்குபவர் | சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் |
காஸ்பார் குறியீடு | 2014-076A |
சாட்காட் இல. | 40319 |
இணையதளம் | www |
திட்டக் காலம் | 6 ஆண்டுகள் (9 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 8 நாட்கள் கழிந்தன) |
விண்கலத்தின் பண்புகள் | |
தயாரிப்பு | NEC [1] |
ஏவல் திணிவு | 610 kg (1,340 lb) |
உலர் நிறை | 490 kg (1,080 lb) [2] |
பரிமாணங்கள் | விண்கலம்: 1 × 1.6 × 1.25 m (3 அடி 3 அங் × 5 அடி 3 அங் × 4 அடி 1 அங்) சூரியக் கலன்: 6 m × 4.23 m (19.7 அடி × 13.9 அடி) |
திறன் | 2.6 kW (1 au இல்), 1.4 kW (1.4 au இல்) |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 3 திசம்பர் 2014, 04:22 ஒ.ச.நே [3] |
ஏவுகலன் | H-IIA 202 |
ஏவலிடம் | தனேகஷிமா விண்வெளி மையம், யொசினோபு |
ஒப்பந்தக்காரர் | மிட்சுபிசி |
திட்ட முடிவு | |
தரையிறங்கிய நாள் | விண்கலம் மீள்-நுழைவு: 5 திசம்பர் 2020 UTC [4] |
தரையிறங்கும் இடம் | உவூமெரா, ஆத்திரேலியா |
புவி-ஐ அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | 3 திசம்பர் 2015 |
தூரம் | 3,090 km (1,920 mi) [5] |
(162173) இரியூகு-உடன் சந்திப்பு | |
வருகை நாள் | 27 சூன் 2018, 09:35 ஒ.ச.நே [6] |
கிளம்பிய நாள் | 12 நவம்பர் 2019 [7] |
Sample mass | 100 mg |
(162173) இரியூகு தரையிறங்கி | |
தரையிறங்கிய நாள் | 21 பெப்ரவரி 2019 |
(162173) இரியூகு தரையிறங்கி | |
தரையிறங்கிய நாள் | 11 சூலை 2019 |
புவி-ஐ (மாதிரியுடன் திரும்பல்) அணுகல் | |
மிகக்கிட்டவான அணுகல் | 5 திசம்பர் 2020 UTC [4] |
கயபுசா2 2014 திசம்பர் 3 இல் ஏவப்பட்டது. இது 162173 இரியூகு என்ற புவியருகு சிறுகோளை 2018 சூன் 27 இல் சந்தித்தது.[9] இது இச்சிறுகோளை ஒன்றரை ஆண்டுகளாக ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை சேகரித்தது. 2019 நவம்பரில் இது சிறுகோளில் இருந்து புறப்பட்டு, 2020 திசம்பர் 5 இல் தான் சேகரித்த மாதிரிகளுடன் புவியை அடைந்தது.[7][10][11][12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.