இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
கபில் சிபல் (Kapil Sibal, பஞ்சாபி : ਕਪਿਲ ਸਿਬਲ, இந்தி: कपिल सिब्बल; பிறப்பு 8 ஆகத்து 1948) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கபில் 2009ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடுவண் அரசில் கடந்த 2009-2014 மன்மோகன் சிங் அரசில், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும்[1] மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். இதற்கு முந்தைய ஆய அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் புவியறிவியல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் ஹர்ஷவர்தனிடம் தோற்றார்[2].
கபில் சிபல் | |
---|---|
2007ஆம் ஆண்டு உலக பொருளாதார மன்றத்தில் கபில் சிபல் | |
நடுவண் மனிதவள மேம்பாடு அமைச்சர் | |
பதவியில் 22 மே 2009 – 2014 | |
முன்னையவர் | அர்ஜுன் சிங் |
பின்னவர் | ஸ்மிருதி இரானி |
நடுவண் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 நவம்பர் 2010 | |
முன்னையவர் | ஆ. ராசா |
நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் | |
பதவியில் 22 மே 2004 – 2010 | |
பின்னவர் | பவன் குமார் பன்சல் |
நடுவண் புவியறிவியல் அமைச்சர் | |
பதவியில் 22 மே 2004 – 2010 | |
பின்னவர் | பவன் குமார் பன்சல் |
சாந்தினிசௌக் மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 ஆகத்து 1948 ஜலந்தர், பஞ்சாப் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | (மறைந்த) நீனா சிபல் (தி. 1973) |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
வாழிடம் | புது தில்லி |
முன்னாள் கல்லூரி | தில்லிப் பல்கலைக்கழகம் (முதுகலை (கலை) பட்டம் மற்றும் சட்ட பட்டப்படிப்பு) ஆர்வர்ட் சட்டப் பள்ளி (சட்ட மேற்படிப்பு) |
தொழில் | வழக்கறிஞர் |
இணையத்தளம் | கபில் சிபல் |
As of 9 சூலை, 2008 |
சூலை 1988ஆம் ஆண்டு பீகாரிலிருந்து மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். திசம்பர் 1989 முதல் திசம்பர் 1990 வரை கூடுதல் சொலிசிடைர் ஜெனரலாக பொறுப்பேற்றார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மூன்று முறை (1995–96, 1997–98 மற்றும் 2001–2002) இருந்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.