கண்ணூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கேரளம்) / From Wikipedia, the free encyclopedia
கண்ணூர் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு, இரிக்கூர், அழீக்கோடு, கண்ணூர், மட்டன்னூர், தர்மடம், பேராவூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள், இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1]. மண்டல புனரமைப்பிற்கு முன்பு இரிக்கூர், அழீக்கோடு, கண்ணூர், எடக்காடு, கூத்துபறம்பு, பேராவூர் வடக்கு வயநாடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன.[2].