![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/AfghanistanHelmandKajakaiDamm.jpg/640px-AfghanistanHelmandKajakaiDamm.jpg&w=640&q=50)
கஜாக்கி அணை
From Wikipedia, the free encyclopedia
கஜாக்கி அணை, ஆப்கானிஸ்தானின் எல்மாந்து மாகாணத்திலுள்ள நீர் மின் ஆற்றல் அணையாகும். இது எல்மாந்து ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கந்தகாரில் இருந்து 100 மைல் (161 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. இது நீர்ப்பாசனத்திற்கும், மின்னாற்றலுக்கும் பயன்படுகிறது. இதன் மூலம் 650,000 ஏக்கர் பரப்பளவிலான நிலத்துக்கு நீர் கிடைக்கிறது. இது 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.[2]
விரைவான உண்மைகள் கஜாக்கி அணை Kajaki Dam, நாடு ...
கஜாக்கி அணை Kajaki Dam | |
---|---|
![]() கஜாக்கி அணையை மேலிருந்து எடுத்த படம் | |
நாடு | ஆப்கானித்தான் |
அமைவிடம் | கஜக்கி மாவட்டம், எழ்மாந்து மாகாணம் |
நோக்கம் | நீர்ப்பாசனம், மின்சாரம் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 1951 |
திறந்தது | 1953 |
உரிமையாளர்(கள்) | நீருக்கும் ஆற்றலுக்குமான துறை, ஆப்கானிஸ்தான் அரசு |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | எல்மாந்து ஆறு |
உயரம் | 100 m (328 அடி) |
நீளம் | 270 m (886 அடி) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 1,715,000,000 m3 (1,390,373 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 1,134,000,000 m3 (919,349 acre⋅ft) |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | எல்மாந்து மற்றும் ஆர்கந்தாப் பள்ளத்தாக்கு ஆணையம் |
பணியமர்த்தம் | 1975 |
சுழலிகள் | 2 x 16.5 மெகாவாட்[1] |
நிறுவப்பட்ட திறன் | 33 MW |
மூடு
100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணை 270 மீட்டர் நீளமுடையது. இது சிஸ்தன் பகுதிக்கு செல்லும் நீரை கட்டுப்படுத்துகிறது.