கசக்குகள்
From Wikipedia, the free encyclopedia
கசக்குகள் என்பவர்கள் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட ஓர் துருக்கிய இனக்குழுவினர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் கசக்கஸ்தானில் வசிக்கின்றனர். இவர்கள் மேலும் வடக்கு உசுபெக்கிசுத்தானின் சில பகுதிகள் மற்றும் உருசியாவின் எல்லைப் பகுதிகள், அத்துடன் வடமேற்கு சீனா (குறிப்பாக இலி கசாக் தன்னாட்சி மாகாணம்) மற்றும் மேற்கு மங்கோலியா (பயான்-உல்கி மாகாணம்) உள்ளிட்ட பல நாடுகளிலும் காணப்படுகிறார்கள். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். பதினைந்தாம் நூற்றாண்டில் துருக்கிய மற்றும் மங்கோலிய வம்சாவளியைச் சேர்ந்த பழங்குடியினரின் இணைப்பில் இருந்து கசக்குகள் உருவாயினர்.[20][21][22][23][24][25]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
15 million | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
கசக்கஸ்தான் | 11,244,547 (2014)[1] |
சீனா | 1,500,000[2] |
உஸ்பெகிஸ்தான் | 1,100,000[3] |
உருசியா | 647,732[4] |
மங்கோலியா | 101,526 |
துருக்மெனிஸ்தான் | 40,000[5] |
கிர்கிசுத்தான் | 33,200[6] |
செருமனி | 46,633[7] |
துருக்கி | 10,000[8] |
ஈரான் | 3,000 - 4,000 to 15,000[9][10] |
உக்ரைன் | 5,526[11] |
ஐக்கிய அரபு அமீரகம் | 5,000[12] |
செக் குடியரசு | 4,821[13] |
ஆஸ்திரியா | 1,685[14] |
பெலருஸ் | 1,355[15] |
மொழி(கள்) | |
கசக் மொழி | |
சமயங்கள் | |
இசுலாம், தெங்கிரி மதம்,[4][16][17][18][19] கிறிஸ்தவம் |
கசக்குகளுக்கென ஓர் தனி அடையாளம் பெரும்பாலும் 1456 மற்றும் 1465 க்கு இடையில் கசக் கானரசு ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டம் பிரிந்ததை தொடர்ந்து, சானிபெக் மற்றும் கெரே அரசர்களின் ஆட்சியின் கீழ் பல பழங்குடியினர் அபுல்-கானரசிலிருந்து வெளியேறி கசக் கானரசை உருவாக்கினர்.
கசக் என்ற சொல் கசாக் இனத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் கசகஸ்தானி என்ற சொல் இன வேறுபாடின்றி கசகஸ்தானின் அனைத்து குடிமக்களையும் குறிக்கிறது.[26][27]